தங்கையை காப்பாற்றிவிட்டு உயிரைவிட்ட 5 வயது சிறுமி... பார்ப்போரை உருகவைக்கும் புகைப்படம்... உலகையே உலுக்குகிறது...! Description: தங்கையை காப்பாற்றிவிட்டு உயிரைவிட்ட 5 வயது சிறுமி... பார்ப்போரை உருகவைக்கும் புகைப்படம்... உலகையே உலுக்குகிறது...!

தங்கையை காப்பாற்றிவிட்டு உயிரைவிட்ட 5 வயது சிறுமி... பார்ப்போரை உருகவைக்கும் புகைப்படம்... உலகையே உலுக்குகிறது...!


தங்கையை காப்பாற்றிவிட்டு உயிரைவிட்ட 5 வயது சிறுமி... பார்ப்போரை உருகவைக்கும் புகைப்படம்... உலகையே உலுக்குகிறது...!

போர், சண்டை ஆகியவற்றின் பேராபத்தை எத்தனை வார்த்தைகளில் எழுதினாலும் அது அனைவருக்குமான செய்தியாக இருப்பது இல்லை. ஆனால் ஒரு ஒற்றைப் புகைப்படம் சமாதானத்துக்கான அவசியத்தை ஆழமாக பேசுகிறது. ஆம்..5 வயது சிறுமி தன் சகோதிரியை காப்பாற்றிவிட்டு உயிரையே விட்டிருக்கிறார்.

சிரியா நாட்டில் அரசுப்படைகளும், கிளர்ச்சியாளர்களும் பயங்கர மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருஅங்கமாக இட்லிப் மாகாணத்திலுள்ள அரிஹா என்ற பகுதியில் போராட்டக்காரர்களை குறிவைத்து அரசுப்படைகள் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் அந்த பகுதியில் இருந்த 5 மாடிக் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது.

அதில் ஒரு மிகப்பெரிய சோகமும் நடந்தேறி இருக்கிறது. அதாவது இந்த 5 மாடிக் குடியிருப்பில் அம்ஜத் அப்துல்லா என்பவரது வீடும் இருக்கிறது. இவரது வீடு நொறுங்கியதில் இவரது மனைவி ஆஸ்மா சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். வீடு இடிந்து விழுந்ததில் இடுபாடுகளில் சிக்கி, அவரது 5 வயது மகள் ரிஹாம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அந்த சூழலில் கூட கீழே விழாமல் இருக்க தங்கையின் சட்டையை தன் ஒருகையால் இறுகப் பிடித்திருந்தார் இந்த 5 வயது சிறுமி. இவரது தங்கைக்கு 7 மாதங்களே ஆகிறது.

ரிஹாமின் பாசப்பிடியில் பற்றி இருந்த அந்த 7 மாத குழந்தை பலத்த காயங்களோடு உயிர் தப்பியது. ஆனால் தன் சகோதிரியை காப்பாற்றிவிட்டு உயிரை விட்டுவிட்டாள் சிறுமி ரிஹாம். இதுதொடர்பான புகைப்படங்கள் பார்ப்பவர்களின் மனதை ஆழமாக உலுக்குகிறது.


நண்பர்களுடன் பகிர :