இணையத்தில் வைரலாகும் பிக்பாஸ் லாஸ்லியாவின் குடும்பப்படம்... லாஸ்லியாவின் தங்கையும் அழகு தாங்கோ! Description: இணையத்தில் வைரலாகும் பிக்பாஸ் லாஸ்லியாவின் குடும்பப்படம்... லாஸ்லியாவின் தங்கையும் அழகு தாங்கோ!

இணையத்தில் வைரலாகும் பிக்பாஸ் லாஸ்லியாவின் குடும்பப்படம்... லாஸ்லியாவின் தங்கையும் அழகு தாங்கோ!


இணையத்தில் வைரலாகும் பிக்பாஸ் லாஸ்லியாவின் குடும்பப்படம்... லாஸ்லியாவின் தங்கையும் அழகு தாங்கோ!

டி.ஆர்.பி ரேட்டிங்கில் எகிறி குதித்து வழக்கம் போல் முந்தி ஓடுகிறது பிக்பாஸ் குதிரை. முதல் இரு சீசன்களைத் தொடர்ந்து பிக்பாஸ் சீசன் மூன்றும் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று இருக்கிறது. பிக்பாஸ் வீட்டில் இருப்பதில் இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா மிகவும் புகழ்பெற்றவராக இருக்கிறார்.

இவர் பொதுவாக மற்றவர்கள் விசயத்தில் தலையிடாமல் அமைதியாக இருப்பதால் இவருக்கு தினம், தினம் ரசிகர்கள் கூடி வருகின்றனர். நெல்லையில் உள்ள பிரசித்திபெற்ற நெல்லையப்பர் கோயில் திருவிழாவுக்கு கூட அந்த பகுதி இளைஞர்கள் லாஸ்லியா படம்போட்டு போஸ்டர் அடித்திருந்தார்கள். தலைநகரில் லாஸ்லியா பேனருக்கு பால் அபிசேகம் நடந்தது. காமெடி நடிகர் சதீஸே வயோதிகர் ஒருவரிடம் லாஸ்லியா பற்றிப்பேசி வீடீயோ போட்டிருந்தார்.

பிக்பாஸ் இல்லத்தில் தன் தந்தை குறித்து, சக கண்டஸ்டண்ட்களிடம் பேசிய லாஸ்லியா, ‘’அப்பா கனடா போய் பத்து வருசம் ஆச்சு. இன்னும் திரும்பல” என சொன்னார். அப்பா பாசத்துக்கு ஏங்கும் லாஸ்லியா அதனால் தான் இயக்குனர் சேரனை...சேரப்பா என அழைப்பார். இப்போது லாஸ்லியா ஆர்மி தேடிப்பிடித்து அவரது அம்மா, தங்கைகளுடன் லாஸ்லியா இருக்கும் படத்தை வெளியிட்டு இருக்கிறது.இந்த படம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

லாஸ்லியாவைப் போல அவரது தங்கையும் அழகாக இருப்பதாக நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.


நண்பர்களுடன் பகிர :