காய்கறி வாங்க வந்த பெண்ணுக்கு நடந்த சோகம்... கடைக்காரர் செய்த செயல் தெரியுமா? Description: காய்கறி வாங்க வந்த பெண்ணுக்கு நடந்த சோகம்... கடைக்காரர் செய்த செயல் தெரியுமா?

காய்கறி வாங்க வந்த பெண்ணுக்கு நடந்த சோகம்... கடைக்காரர் செய்த செயல் தெரியுமா?


காய்கறி வாங்க வந்த பெண்ணுக்கு நடந்த சோகம்... கடைக்காரர் செய்த செயல் தெரியுமா?

நேர்மைக்கு வறுமை எப்போதுமே தடை கிடையாது. அடுத்தவேளை உணவுக்கு வழியில்லாத ஏழை மக்களிலும் நேர்மையானவர்கள் பலர் உண்டு. அதை மெய்பிக்கும் வகையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அது என்ன என்கிறீர்களா? தொடர்ந்து படியுங்கள்.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த பெண் ஸ்ரீமதி. இவர் அங்கு உள்ள காய்கறி சந்தை ஒன்றில் காய்கறிகள் வாங்கப் போனார். வாங்கிவிட்டு வீட்டுக்கு வந்தவர் கடும் அதிர்ச்சி அடைந்தார். காரணம், அவரது பர்சையும், செல்போனை வழியில் எங்கேயோ தொலைத்து இருந்தார். பர்ஸ்க்குள்ளேயே செல்போனும் இருந்ததால் அதுவும் மிஸ்ஸான நிலையில் அந்த செல் நம்பருக்கு வீட்டில் இருந்து தொடர்ந்து போன் செய்து கொண்டே இருந்தார். ஆனால் யாரும் போனை எடுக்கவில்லை.

இதனால் தனது பணம், பர்ஸ் போய்விட்டது என முடிவெடுத்தவர் அந்த சம்பவத்தையே மறந்துவிட்டார். சில தினங்கள் கழித்து அவர் மீண்டும் சந்தைக்கு காய்கறி வாங்கப் போனார். அப்போது அந்த காய்கறிக்கடைக்காரர் ஸ்ரீமதியை நினைவில் வைத்து, யம்மா உங்க பர்ஸை இங்க விட்டுட்டு போயிட்டீங்க...நிறைய போன் கூட அடிச்சுது. ஆனா எனக்கு இந்த போன்லாம் எடுக்கத் தெரியாது என சொல்லியிருக்கிறார்.

அந்த ஸ்ரீமதி பர்ஸை திறந்து பார்த்த போது ஆச்சர்யம் அடைந்தார். செல்போன், பணம் ஏன் சில்லறை காசுகள் கூட அப்படியே இருந்தது. காய்கறிக்கடைக்காரர் பரஸை திறந்துகூட பார்க்கவில்லை. இதனால் வைத்திருந்த பொருள்கள் வைத்த இடத்திலேயே இருந்தது. இதைப் பார்த்ததும் சோகத்தை மறந்து அந்த காய்கறிக்கடைக்காரருக்கு நன்றி சொன்னார் ஸ்ரீமதி. அந்த பர்ஸ்க்கும் 3500 ரூபாய் பணமும், முப்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்லும் இருந்தது..

இந்த எளிய மனிதனின் நேர்மையை நீங்களும் வாழ்த்தலாமே...


நண்பர்களுடன் பகிர :