டிக்டாக் மோகத்தால் தொடரும் விபரீதம்.. விமானத்தின் எஞ்சினில் பயணித்த வாலிபர்.. தீயாய் பரவும் காட்சிகள்..! Description: டிக்டாக் மோகத்தால் தொடரும் விபரீதம்.. விமானத்தின் எஞ்சினில் பயணித்த வாலிபர்.. தீயாய் பரவும் காட்சிகள்..!

டிக்டாக் மோகத்தால் தொடரும் விபரீதம்.. விமானத்தின் எஞ்சினில் பயணித்த வாலிபர்.. தீயாய் பரவும் காட்சிகள்..!


டிக்டாக் மோகத்தால் தொடரும் விபரீதம்.. விமானத்தின் எஞ்சினில் பயணித்த வாலிபர்..  தீயாய் பரவும் காட்சிகள்..!

இந்த செல்பி மோகம் எப்போதுதான் தீரும்? என கவலை கொள்ள வைக்கும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. பொதுவாக இந்த தலைமுறையினர் செல்பி, டிக்டாக் ஆகியவற்றுக்கு அடிமைகளாக இருக்கின்றனர். அதிலும் அதற்காகவே அவர்கள் எடுக்கும் ரிஸ்க்கள் மிகவும் அபாயகரமாக இருக்கிறது.

அந்தவகையில் நைஜீரியா நாட்டு இளைஞர் ஒருவர் ஓடுதளத்தில் இருந்து பறக்கத் தயாரான விமானத்தின் எஞ்சினில் ஏறி சாகசம் செய்து, செல்பி, டிக்டாக் வீடீயோக்கள் எடுக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது

கடந்த சில தினங்களுக்கு முன்னர் முர்டலா முகமது விமானநிலையத்தில் இருந்து. பயணிகள் விமானம் ஒன்று பறக்கத் தயாரானது. அப்போது ஒரு இளைஞர் விமானத்தின் இறக்கையில் உள்ள எஞ்சினை பிடித்து தொங்கிக் கொண்டிருந்தார்.

இதை விமானத்தில் இருந்த பயணி ஒருவர் வீடியோ எடுத்து சோசியல் மீடீயாக்களில் பதிவிட அது இப்போது வைரலாகி வருகிறது. இந்த இளைஞரை விமான நிலையத்தில் இருந்தோர் கீழே இறக்கிவிட்டனர். அந்த இளைஞர் செல்பி, டிக்டாக் வீடீயோவுக்காக இப்படி செய்தாராம். இவரால் அந்த விமானமும் முப்பது நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டது.


நண்பர்களுடன் பகிர :