60 வருசமா லீவே எடுக்காம வேலை செய்யும் பாட்டி... 91 வயது பாட்டி பார்க்குற வேலையை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க..! Description: 60 வருசமா லீவே எடுக்காம வேலை செய்யும் பாட்டி... 91 வயது பாட்டி பார்க்குற வேலையை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க..!

60 வருசமா லீவே எடுக்காம வேலை செய்யும் பாட்டி... 91 வயது பாட்டி பார்க்குற வேலையை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க..!


60 வருசமா லீவே எடுக்காம வேலை செய்யும் பாட்டி... 91 வயது பாட்டி பார்க்குற வேலையை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க..!

வாலிப பருவத்தினரே உடல் வலிக்க வேலை செய்யத் தயங்கும் காலம் இது. அதிலும் கொஞ்சம் குனிந்து, நிமிர்ந்தாலே அய்யோ...அம்மா என வாய்விட்டே புலம்பி விடுகின்றனர். ஆனால் கேரளத்தில் ஒரு பாட்டி 60 ஆண்டுகளாக லீவே எடுக்காமல் வேலை செய்கிறார்.

அதிலும் அவர் செய்யும் வேலை குறித்து கேட்டால் ஷாக் ஆகிவிடுவீர்கள். கேரளத்தை சேர்ந்த காத்ரினா பாட்டிக்கு 91 வயது. தினசரி காலையில் 5 மணிக்கு எழுந்து விடுகிறார் பாட்டி. வழக்கமாக தன் வீட்டுப் பக்கத்தில் இருக்கும் ஆட்டோ சாரதியோடு வேலைக்கு செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். பாட்டி இந்த 91 வயதில் அப்படி என்ன வேலை செய்கிறார் தெரியுமா? கட்டிடப்பணி!

பாட்டி இதில் 60 வருட அனுபவம்மிக்கவர். அதிலும் ஒருநாள் கூட லீவு எடுத்ததே கிடையாதாம். இதனால் சுற்றுவட்டாரத்தில் கட்டிட வேலை நடந்தால் காண்டிராக்டர்கள் உடனே காத்ரினா பாட்டியைத்தான் கூப்பிடுவார்களாம். கூடவே மொத்த டீமையும் உருட்டி, மிரட்டி வேலைவாங்கும் பொறுப்பையும் தன் வசம் வைத்துக்கொள்ளும் பாட்டியின் காலை உணவு வெறும் கட்டஞ்சாயா தான்!

சரி பாட்டி 60 வருசமா லீவே போடலியே? என்ன சம்பாதிச்சுருக்கீங்க என்று கேட்டால், ‘’4 பிள்ளைகளுக்கு சொந்தவீடு கட்டிக் கொடுத்துருக்கேன்ல..”என்கிறார். இப்போது பாட்டிக்கு 9 பேரப்புள்ளைகளும், 14 கொள்ளுப் பேரன் பேத்திகளும் இருக்கிறார்கள்.இந்த வயதிலும் பாட்டி செங்கலை அசால்டாக தூக்கி சுமக்கிறார்.

பியூட்டிகளை மறந்துவிட்டு இந்த பாட்டியை கொண்டாடலாமே!


நண்பர்களுடன் பகிர :