பிக்பாஸ்வீட்டில் ராத்திரி இவ்வளவு கொடுமை நடக்குதா? ரகசியம் உடைத்த வனிதா விஜயகுமார்...! Description: பிக்பாஸ்வீட்டில் ராத்திரி இவ்வளவு கொடுமை நடக்குதா? ரகசியம் உடைத்த வனிதா விஜயகுமார்...!

பிக்பாஸ்வீட்டில் ராத்திரி இவ்வளவு கொடுமை நடக்குதா? ரகசியம் உடைத்த வனிதா விஜயகுமார்...!


பிக்பாஸ்வீட்டில் ராத்திரி இவ்வளவு கொடுமை நடக்குதா? ரகசியம் உடைத்த வனிதா விஜயகுமார்...!

பத்மஸ்ரீ நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் இரு சீசன்களைக் கடந்து, வெற்றிகரமாக மூன்றாவது சீசனை எட்டியிருக்கிறது. முதல் இரு சீசன்களைப் போலவே இந்த சீசனும் பட்டிதொட்டியெங்கும் மெகா ஹிட் அடித்துள்ளது.

இதில் லாஸ்லியா பலர் மனதிலும் குடி கொண்டு இருக்கிறார். இதில் கடந்தவாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வனிதா விஜயகுமார் எலிமினேட் செய்யப்பட்டார். அவர் வெளியேறிய பின்னர் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில் தான் வெளியேற்றப்பட்டது குறித்து பேட்டி கொடுத்திருக்கிறார் வனிதா. அதில் வனிதா வெளியிட்ட தகவல் பிக்பாஸ் வீட்டில் பல கொடுமைகள் நடப்பதை வெளி உலகுக்கு காட்டியுள்ளது.

அதில் அவர் கூறியது...’’பிக்பாஸ் வீட்டில் விடிய, விடிய லைட் எரிந்துகொண்டே இருக்கும். சும்மா கேமராவுக்காக கொஞ்சநேரம் தான் லைட்ஸ் ஆப் செய்வார்கள். இதனால் இரவு முழுக்க லைட் எரியும். அதில் தூங்குவதே கஷ்டமாக இருக்கும். “என குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் இரவில் லைட் ஆப் செய்யப்படுவதே பொய் என தெரிய வந்துள்ளது. இதுபோல் நாம் பார்க்கும் எத்தனை காட்சிகள் போலியானதோ? இரவில் நல்ல தூக்கம் இல்லாமல் போட்டியாளர்கள் அனுபவிக்கும் கொடுமை வனிதா மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


நண்பர்களுடன் பகிர :