வெளிநாட்டுக்குப்போய் 40 ஆண்டுகள் மாடாய் உழைத்த நபர்.. ஊர் திரும்பிய வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..! Description: வெளிநாட்டுக்குப்போய் 40 ஆண்டுகள் மாடாய் உழைத்த நபர்.. ஊர் திரும்பிய வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

வெளிநாட்டுக்குப்போய் 40 ஆண்டுகள் மாடாய் உழைத்த நபர்.. ஊர் திரும்பிய வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!


வெளிநாட்டுக்குப்போய் 40 ஆண்டுகள் மாடாய் உழைத்த நபர்.. ஊர் திரும்பிய வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

தனது குடும்பத்தை முன்னேற்றுவதற்காக 40 ஆண்டுகள் கஷ்டப்பட்டு வெளிநாட்டில் வேலை செய்தவர், ஆசையோடு ஊருக்கு சென்றபோது அதே குடும்பத்தினர் விரட்டி அடித்த சம்பவம் தெரிய வந்துள்ளது.

கேரளத்தின் கண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது குஞ்ஞி. இவருக்கு இரு சகோதிரிகள் உள்ளனர். மிகவும் எளிய குடும்பத்தை சேர்ந்த முகமது, தன் சகோதிரிகளைக் காக்க கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே ஐக்கிய அமீரகம் சென்றுள்ளார். இவர் இந்தியர்களின் உணவு விடுதிகள், ஷாப்பிங் மால்களில் பணியாற்றி வந்தார் முகமது.

முகமது தனக்கென ஒரு குடும்பத்தை உருவாக்கிக்கொள்ளவில்லை. நீண்ட காலம் பிரம்மச்சாரியாக வாழ்ந்தவர் கடைசியில் ரெளலாவை திருமணம் செய்தார். ஆனால் இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லை. தனது சகோதிரிகள் இருவரையும் நல்ல இடத்தில் திருமணம் செய்துவைத்து, அவர்களின் பிள்ளைகள் திருமணத்துக்கும் நிதி கொடுத்தார். சகோதிரிகள் இருவருக்கும் இவரே சொந்தமாக வீடும் கட்டிக் கொடுத்துள்ளார். இப்படியெல்லாம் மாடாக உழைத்த முகமது அண்மையில் வயது மூப்பின் காரணமாக வெளிநாட்டு வேலையை விட்டுவிட்டு கேரளம் திரும்பினார்.

ஊருக்கு வந்தவரை குடும்பம் வேறுமாதிரியாக ட்ரீட் செய்ய ஆரம்பித்தது. முகமதுவுக்கு உணவுக்கே கெஞ்சும் நிலை ஏற்பட்டது. ஒருகட்டத்தில் முகமது கட்டிக்கொடுத்த வீட்டில் இருந்துகொண்டே அவரை வீட்டை விட்டு துரத்தி விட்டனர். இதனால் மனம் உடைந்த முகமது, ரெளலாவையும் அழைத்துக் கொண்டு மீண்டும் ஐய்க்கிய அமீரகம் போனார். ஆனால் வயது மூப்பின் காரணமாக அவருக்கு வேலை கிடைக்கவில்லை.

இந்த வேதனையில் ஊர் திரும்பிய முகமது சில வாரங்களுக்கு முன்பு உயிர் இழந்தார். அந்த துக்கத்திலேயே அவரது மனைவி ரெளலாவும் இறந்துவிட்டார். குடும்பம்...குடும்பம் என உழைத்தவர் கடைசியில் அந்த குடும்பம் உதாசீனப்படுத்தியதால் உயிரையே விட்டிருக்கிறார்.


நண்பர்களுடன் பகிர :

R
RAyubkhan 11மாதத்திற்கு முன்
நன்றி கெட்ட வர்கள் அல்லாஅறிவார்