நீண்டகாலம் வாழவைக்கும் வாழை இலை குளியல் பற்றி தெரியுமா? சாப்பிட மட்டும் இல்லைங்க...நோய்களை நீக்கவும் வாழையை கையில் எடுங்க..! Description: நீண்டகாலம் வாழவைக்கும் வாழை இலை குளியல் பற்றி தெரியுமா? சாப்பிட மட்டும் இல்லைங்க...நோய்களை நீக்கவும் வாழையை கையில் எடுங்க..!

நீண்டகாலம் வாழவைக்கும் வாழை இலை குளியல் பற்றி தெரியுமா? சாப்பிட மட்டும் இல்லைங்க...நோய்களை நீக்கவும் வாழையை கையில் எடுங்க..!


நீண்டகாலம் வாழவைக்கும் வாழை இலை குளியல் பற்றி தெரியுமா? சாப்பிட மட்டும் இல்லைங்க...நோய்களை நீக்கவும் வாழையை கையில் எடுங்க..!

சோப்பு குளியல், சேம்பு குளியல், நல்லெண்ணெய் குளியல் என பல வகை குளியல்கள் நமக்குத் தெரியும். அதேநேரம் வாழை இலை குளியல் பற்றித் தெரியுமா? அதுவும் இது நம் உடலில் இருக்கும் நோய்களை நீக்கி, நீண்டகாலம் வாழவும் வைக்கும்.

அதென்ன வாழை இலை குளியல் எனத் தெரிந்து கொள்வதற்கு முன்னால் வியர்வையின் அருமை,பெருமைகளை கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்கள். வியர்வை வருவதை நாம் அருவருப்பாக நினைக்கிறோம். ஆனால் வியர்வை நம் ஆரோக்கியத்தின் வெளிப்பாடு என பலருக்கும் தெரிவது இல்லை. வியர்வை வெளிப்படும்போது, சருமத்தில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். வியர்வை வெளியேற, வெளியேற நம் உடலில் நோய் எதிர்ப்புசக்தி கூடும். உடலும் ஆரோக்கியமானதாக இருக்கும்.

இப்போதெல்லாம் வியர்வை சிந்தி உழைப்பதையே கவுரக் குறைச்சல் என நினைக்த் துவங்கிவிட்டனர். வீட்டுக்கு வீடு ஏசி பெட்டிகள் வந்துவிட்டது. இதனால் வியர்வையின் மூலம் வெளியேற வேண்டிய நச்சுகள், நம் உடலில் தங்கிவிடுகிறது. இதை போக்க ஒரு அற்புத வழிதான் இந்த வாழை இலை குளியல். வாழை இலையில் உள்ள பாலிபீனால் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாகவும், கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.

என்ன பயன்?

இந்த வாழை இலையில் கார்பண்டை ஆக்ஸைடை ஈர்த்து, ஆக்சிஜனை வெளியிடும் அளவு அதிகம். இது உடலில் இருக்கும் கெட்ட வாயு, கழிவுகளை நீக்கும். உடலில் இருக்கும் புண், காயங்களை ஆற்றும் தன்மையும் வாழை இலை குளியலுக்கு உண்டு. இந்த குளியலை 18 வயது முதல் 80 வயதுவரை உள்ளோர் எடுக்கலாம். அதேநேரம் ஆஸ்துமா நோயாளிகளும், மாதவிலக்கு காலங்களில் பெண்களும், குழந்தைகள், கர்ப்பிணிகளும் இதைத் தவிர்க்க வேண்டும். இந்த குளியலுக்கு செல்லும்முன்பு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். அப்போதுதான் அவை வியர்வையாக வெளியே வரும்.

இந்த குளியலை வீட்டிலேயே முயற்சிக்கக் கூடாது. இயற்கைமுறை வைத்தியர்களின் முன்பு செய்ய வேண்டும். குறிப்பாக பகல் 12 மணிக்கு முன்புதான் இதைச் செய்ய வேண்டும். நல்ல வெயிலில் உள்ளாடைகள், தளர்வான ஆடைகளுடன் வாழை இலைமீது படுக்க வேண்டும். அவர்களை வாழை இலையால் மூடுவார்கள். சுவாசிக்க வசதியாக மூக்குப் பகுதியில் மட்டும் ஓட்டை போடப்படும். உடல் முழுவதும் வாழை இலை சூழ்ந்த நிலையில் நாரால் கட்டி விடுவார்கள். 25 நிமிடங்கள் அப்படியே இருக்க வேண்டும்.

சூரிய வெளிச்சம் இலையில் பட, பட அது நம் உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றும். இந்த குளியல் உடல் எடையையும் குறைக்கும். உடலில் இருக்கும் இணைப்பு வலிகளையும் குறைக்கும். சொரியாசிஸ் தொடங்கி படை, தேமல் என சகல தோல்நோயையும் போக்கும். இதேபோல் நம் உடலில் இருக்கும் கெட்ட கொழிப்பையும் நீக்கும். இதயநோயாளிகளும் கூட மருத்துவரின் வழிகாட்டுதலோடு இந்த குளியலை செய்யலாம். இந்த குளியல் கை, கால் வீக்கத்தையும் குறைக்கும்.

அப்புறமென்ன இனி சாப்பிட மட்டும் இல்ல..நம்ம ஆரோக்கியத்துக்காகவும் வாழையை கையில் எடுங்க..’’வாழை வாழ வைக்கும்”ன்னு நம்ம முன்னோர்கள் சும்மா ஒன்னும் சொல்லிவைக்கல!


நண்பர்களுடன் பகிர :