கடலுக்குள் தரையிறங்கிய பயணிகள் விமானம்... விமானியின் கேமராவில் பதிவான திக் திக் காட்சிகள்..! Description: கடலுக்குள் தரையிறங்கிய பயணிகள் விமானம்... விமானியின் கேமராவில் பதிவான திக் திக் காட்சிகள்..!

கடலுக்குள் தரையிறங்கிய பயணிகள் விமானம்... விமானியின் கேமராவில் பதிவான திக் திக் காட்சிகள்..!


கடலுக்குள் தரையிறங்கிய பயணிகள் விமானம்... விமானியின் கேமராவில் பதிவான திக் திக் காட்சிகள்..!

விமானம் அதன் ஓடுதளத்தில் இறங்கி விமான நிலையத்தில் வந்து இறங்கி நிற்பதைப் பார்த்திருப்போம். அதேபோல் நடுவானில் விபத்துக்குள்ளாகி விமானம் கடலில் விழுவதையும் கூட கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் விமானியே விமானத்தை கடல் பரப்பில் இறக்கிய சம்பவம் ஒன்று அதிர்வுகளை ஏற்படுத்தி இருக்கிறது.

பசுபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள மைக்ரோனேசியாவில் சூக் தீவில் உள்ள விமான நிலையத்தில் தரையிரங்குவதற்கு பதிலாக அதற்கு அருகில் இருந்த கடல் பரப்பில் தரை இறங்கியது. கடந்த ஆண்டு நடந்த இந்த சம்பவத்தின் வீடீயோ பதிவு இப்போது வைரலாகி வருகிறது. இது குறித்து மேலும் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

போன்பேய் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, பப்புவா நியுகினியாவரை செல்லும் அந்த ஏர் நியூகினி விமானம் வழியில் சூக் தீவில் நின்று செல்லும். அந்த விமானத்தில் 35 பணியாளர்கள், 12 விமானப் பணியாளர்கள் உள்பட மொத்தம் 47 பேர் இருந்தனர். வானில் நிலவிய மோசமான வானிலையின் காரணமாக நிகழ்ந்த விபத்து இது.இந்த விபத்தில் சீட் பெல்ட் அணியாமல் இருந்த ஒரு பயணியை தவிர மற்றவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இந்த விபத்து தொடர்பாக பப்புவா நியூகினியா விசாரணை ஆணையமும் அமைத்துள்ளது. இந்த ஆணையமானது, ஓடுதளத்துக்கு 1500 அடிக்கு மேலே இந்த விமானம் தரையிறங்க என்ன காரணம் என விசாரிக்கிறது. இந்த விமானத்தில் நீர் பரப்பின் மேல் விமானம் இறங்குவதாக 17 முறை கம்யூட்டர் தெளிவான எச்சரிக்கை செய்கிறது. ஆனால் விமானி அதை பொருட்படுத்தாதுதான் விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

இத்தனைக்கும் 52 வயதான அந்த விஞ்ஞானி 20 ஆயிரம் மணிநேரம் விமானம் ஓட்டிய அனுபவம்மிக்கவர். அவரைத் தொடர்ந்து முதன்மை அலுவலராக விமானத்தில் இருந்தவரும் 17 முறை எச்சரித்ததை கவனிக்காமல் இருந்ததால் ஓடுதளத்துக்கு சிறிதுதூரத்துக்கு முன்னரே கடல் பரப்பில் விமானம் தரை இறங்கி விட்டது. இதையும் அந்த விமானியே மொபைலில் வீடீயோவாக எடுத்துள்ளார். இது இப்போது வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :