கிரிக்கெட்டில் இருந்து தல தோனி ஓய்வு பெறுவது எப்போது? இந்த அசைன்மெண்டை முடிச்சுட்டு தான் ஓய்வு என தோனி வைராக்யம்..! Description: கிரிக்கெட்டில் இருந்து தல தோனி ஓய்வு பெறுவது எப்போது? இந்த அசைன்மெண்டை முடிச்சுட்டு தான் ஓய்வு என தோனி வைராக்யம்..!

கிரிக்கெட்டில் இருந்து தல தோனி ஓய்வு பெறுவது எப்போது? இந்த அசைன்மெண்டை முடிச்சுட்டு தான் ஓய்வு என தோனி வைராக்யம்..!


கிரிக்கெட்டில் இருந்து தல தோனி ஓய்வு பெறுவது எப்போது? இந்த அசைன்மெண்டை முடிச்சுட்டு தான் ஓய்வு என தோனி வைராக்யம்..!

சினிமாவுக்கு எப்படி நடிகர் அஜித்குமார் தலயோ, அதேபோல் கிரிக்கெட் பிரியர்களுக்கு தோனி தான் தல. அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்து உலகக்கோப்பைத் தொடரில் இருந்து வெளியேறியது இந்தியா.

தொடர்ந்து இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் கலந்து கொண்டு மூன்று ஒருநாள், இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதற்கிடையில் தல தோனி, உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவிலேயே தனது ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தோனி அதைச் செய்யவில்லை. இந்திய கிரிக்கெட் வாரியமும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்குவது போல் சூழல் இல்லை இந்நிலையில் கிரிக்கெட் வாரியம் மேற்கிந்திய தீவுகள் அணியோடு மோதும் இந்திய வீரர்கள் என 15 பேர் பட்டியலை வெளியிட்டது.

இந்த பட்டியலில் தல தோனியின் பெயர் இருந்தாலும், அவர் போட்டியில் களம் இறக்கப்பட மாட்டார் எனவும் கூறப்படுகிறார். ரசிகர்களால் உச்சிமுகர்ந்து பார்க்கப்பட்ட தோனி, இப்படி கொஞ்சம், கொஞ்சமாக ஓரங்கட்டப்பட்டு வருகிறார்.

இத்தனை களேபரங்களுக்கும் மத்தியில் இந்தியாவின் எதிர்கால விக்கெட் கீப்பரான பண்டை மெருகேற்றி ஜொலிக்க வைக்கும் முனைப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் தோனி. இதற்காகவே அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி 20 போட்டிவரை விளையாடுவாராம் தல தோனி. . அணியில் ஆட வாய்ப்பு கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் பண்டை சிறந்த விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் என சகலகலா வல்லவாக்குவதே தன் வைராக்யம் என ரிட்டயர்ட்மெண்ட்க்கு இப்போதைக்கு பை சொல்லி வைத்திருக்கிறாராம் தோனி.


நண்பர்களுடன் பகிர :