பெண்ணாசையால் வீழ்ந்தாலும்... ஊழியர்களுக்கு இவ்வளவு செய்திருக்கிறாரா? பணியாளர் சொன்ன நெகிழ்ச்சி தகவல்கள்..! Description: பெண்ணாசையால் வீழ்ந்தாலும்... ஊழியர்களுக்கு இவ்வளவு செய்திருக்கிறாரா? பணியாளர் சொன்ன நெகிழ்ச்சி தகவல்கள்..!

பெண்ணாசையால் வீழ்ந்தாலும்... ஊழியர்களுக்கு இவ்வளவு செய்திருக்கிறாரா? பணியாளர் சொன்ன நெகிழ்ச்சி தகவல்கள்..!


பெண்ணாசையால் வீழ்ந்தாலும்... ஊழியர்களுக்கு இவ்வளவு செய்திருக்கிறாரா? பணியாளர் சொன்ன நெகிழ்ச்சி தகவல்கள்..!

ஜீவஜோதியின் கணவர் கொலை வழக்கில் கைதாகி, சிறைதண்டனை உறுதி செய்யப்பட்ட சூழலில் மருத்துவமனையில் சிகிட்சை பலனின்றி உயிர் இழந்தார் சரவணபவன் ராஜகோபால். சிறந்த முருகபக்தர், கிருபானந்த வாரியார் மீது பற்றும், பாசமும் கொண்டவர். தூத்துக்குடி மாவட்டத்தில் நவதிருப்பதி கோயில் கட்டியவர் என பலப் அடையாளங்களைச் சொன்னாலும், பெண்ணாசையால் தன் வாழ்வின் கடைசிப் பகுதியை அலங்கோலம் ஆக்கிக் கொண்டவர் அண்ணாச்சி.

அந்த ஒரு விசயத்தை விட்டுவிட்டுப் பார்த்தால் ராஜகோபாலிடம் பல நல்ல பண்புகள் குடிகொண்டு இருந்தன. அதில் முக்கியமானது தன் ஊழியர்களுக்கு அவர் செய்த விசயங்கள். இதுகுறித்து முன்னரே ஒரு பிரபல செய்தி நிறுவனத்துக்கு அவரது ஊழியர்கள் உருக்கத்துடன் பேட்டி கொடுத்தனர். அதன் சாரம்சம் இதுதான்.

1990ம் ஆண்டு நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் சார்பில் ரோலோ ரோமிங் என்பவர்சரவணபவனுக்கு வந்தார். அவர் வந்ததன் காரணம் என்ன தெரியுமா? வெளிநாடுகளில் சரவணபவன்ஹோட்டல் தோசையை தங்கபான் கேக் என்று சொல்வார்கள்.அதன் ரகசியம், மாவு தயாரிப்பின் நுட்பத்தை கேட்கத்தான் வந்தார்.

அப்போது அங்கு இருந்த கடை ஊழியர் ஒருவரிடம் உங்க அண்ணாச்சி எப்படி எனக் கேட்க, ‘’நம்மை குடும்பத்தில் ஒருத்தரா பார்த்துக்குவாரு. என்ன வேண்ணா அவர்கிட்ட உரிமையா சொல்லலாம். நம் பிரச்னையை அவரிடம் சொன்னால் அவரே அதைப் பார்த்து தீர்த்து வைப்பார். சொந்த ஊருக்கு போகணும்ன்னு சொன்னா, எக்ஸ்ட்ரா அதுக்கு தனியா பணம் கொடுப்பாரு.

அவர் சொந்த ஊர் மக்கள் அவர் மீது அளவு கடந்த பாசமும், அன்பும் வைத்திருந்தார்கள். ஊழியர்களுக்கும் நிறைய சலுகை செய்வார். செல்போன், பைக், பெட்ரோலுக்கு காசு என கொடுத்துவிடுவார். அனைவரும் பேப்பர் படிக்க வேண்டும் என சொல்லும் அண்ணாச்சி அதற்கும் காசு கொடுப்பார். நீண்டகாலமாக முடிவெட்டக் கூட பணம் கொடுத்து வந்தார். பைக் ரிப்பேர் ஆனால் கூட அதை சரிசெய்ய பணம் கொடுப்பார்.”என்று சொல்லியிருக்கிறார்.

அண்ணாச்சியிடம் இத்தனை நல்ல குணங்களா? என வியந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.


நண்பர்களுடன் பகிர :