பார்ப்போரை சோகத்தில் ஆழ்த்தும் குழந்தையின் புகைப்படம்... உலகையே உலுக்கிய ஒற்றைப்படமும்..பிண்ணனியும்! Description: பார்ப்போரை சோகத்தில் ஆழ்த்தும் குழந்தையின் புகைப்படம்... உலகையே உலுக்கிய ஒற்றைப்படமும்..பிண்ணனியும்!

பார்ப்போரை சோகத்தில் ஆழ்த்தும் குழந்தையின் புகைப்படம்... உலகையே உலுக்கிய ஒற்றைப்படமும்..பிண்ணனியும்!


பார்ப்போரை சோகத்தில் ஆழ்த்தும் குழந்தையின் புகைப்படம்... உலகையே உலுக்கிய ஒற்றைப்படமும்..பிண்ணனியும்!

பக்கம், பக்கமாய் எழுதுவதை விட அது தரும் உணர்வை விட ஆழமான உணர்வையும், பாதிப்பின் தீவிரத்தையும் ஒரு புகைப்படம் உணர்த்து விடும். அப்படியான புகைப்படம் ஒன்று பார்ப்போரை சோகத்தில் ஆழ்த்தி வருகிறது.

இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். ‘’ பீகார், உத்திரப்பிரதேசம், அசாம் மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. சற்றேறக்குறைய 90 லட்சம் மக்கள் மழையால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அசாமின் 30 மாவட்டங்களில் கடும்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கனமழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 67 பேர் உயிர் இழந்திருக்கின்றனர். சமவெளியைப் போல் வனங்களில் பெய்துவரும் மழையால் விலங்கினங்களும் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.

அரசு இங்கு நிவாரணப்பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. பல இடங்களில் தன்னார்வலர்களும் இதில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் பீகார் வெள்ளத்தின் சோகத்தை விளக்கும் வகையில் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. மூன்று வயது குழந்தை ஒன்றின் இறப்பு தொடர்பான புகைப்படம் அது.

பீகாரின் ஷிடால்பட்டி என்ற இடத்தைச் சேர்ந்த ராணிதேவி என்பவர் தன்னுடைய நான்கு குழந்தைகளுடன் ஆற்றுக்கு குளிக்கச் சென்றார்.தொடர் மழை, வெள்ளப்பெருக்கு காரணமாக நீரோட்டத்தில் குழந்தையை வெள்ளம் இழுத்துச் சென்றது. குழந்தையை காப்பாற்ற பதட்டத்தோடு ராணிதேவி ஆற்றில் குதித்தார். அவர் குதிப்பதைப் பார்த்த மற்ற குழந்தைகளும் ஆற்றில் குதித்தன

அக்கம் பக்கத்தினர் உடனே ஆற்றில் குதித்தனர். ஆனால் அவர்களால் ராணிதேவியையும், ஒரு குழந்தையையும் மட்டுமே காப்பாற்ற முடிந்தது. மற்றவர்களை ஆற்றுநீர் இழுத்துச் சென்றது. வெள்ளம் இழுத்துச் சென்றதில் மூன்று வயதான அர்ஜூன் என்னும் குழந்தையின் உடல் கிடைத்துள்ளது. அந்த படத்தைப் பார்த்தாலே சோகம் வரச் செய்கிறது. இந்த படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :