சரவணபவன் ராஜகோபாலின் கடைசி ஆசை இது தான்... கண்ணீர் மல்க நிறைவேற்றிய அவரது கடை ஊழியர்கள்..! Description: சரவணபவன் ராஜகோபாலின் கடைசி ஆசை இது தான்... கண்ணீர் மல்க நிறைவேற்றிய அவரது கடை ஊழியர்கள்..!

சரவணபவன் ராஜகோபாலின் கடைசி ஆசை இது தான்... கண்ணீர் மல்க நிறைவேற்றிய அவரது கடை ஊழியர்கள்..!


சரவணபவன் ராஜகோபாலின் கடைசி ஆசை இது தான்... கண்ணீர் மல்க நிறைவேற்றிய அவரது கடை ஊழியர்கள்..!

ஜீவஜோதியின் கணவர் கொலை வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையிலேயே மரணித்தார் சரவணபவன் அண்ணாச்சி ராஜகோபால். சாப்பாட்டு விசயத்திலும், தொழிலில் புதுமை செய்வதிலும் சக்கரவர்த்தியாக இருந்த சரவணபவனின் தனிப்பட்ட வாழ்க்கையின் இறுதி அத்தியாயம் மிகக்கோரமானது.





அதிலும் ராஜகோபால் அண்ணாச்சிக்கு கடைசி ஆசை என ஒன்று இருந்தது. அதை அவரது கடையின் ஊழியர்கள் மிகுந்த பொறுப்போடு நிறைவேற்றினர். தமிழகம் கடந்தும் கொடிகட்டி பறந்த சரவணபவனை நிறுவிய ராஜகோபால் தீவிரமான முருகப் பக்தர். கிருபானந்த வாரியாரின் சீடராக இருந்த ராஜகோபால், தனது உணவகத்துக்கு சரவணபவன் என பெயர் வைத்த காரணமும் இதுதான்.





தூத்துக்குடி மாவட்டம் கச்சனா விளையில் நவதிருப்பதி என்னும் கோயிலையும் உருவாக்கி இருக்கிறார் சரவணபவன் அண்ணாச்சி. சரவண்பவன் ராஜகோபால் தன் குடும்பத்தினரிடம் அடிக்கடி ஒரு விசயம் சொல்லுவார். அதாவது, ‘’தான் இறந்தாலும் கூட தன் இறப்பு தினத்திலும் சரவணபவன் திறந்தே இருக்க வேண்டும்.”என்பதுதான் அது!





அப்படியே அவர் இறந்து வீட்டில் பிணமாகக் கிடந்த நாளிலும் இயங்கியது சரவண பவன். பெண்ணாசையால் வாழ்க்கையே திசைமாறினாலும் தனது தொழில் மீது அவர் கொண்ட பற்று சிலிர்ப்பூட்டுகிறது.


நண்பர்களுடன் பகிர :