திருமணத்தை தடுத்து நிறுத்தியவர்களுக்கு பிளக்ஸ் வைத்து நன்றி சொன்ன இளைஞர்கள்... குமரியில் வைரலாகும் பேனர்...! Description: திருமணத்தை தடுத்து நிறுத்தியவர்களுக்கு பிளக்ஸ் வைத்து நன்றி சொன்ன இளைஞர்கள்... குமரியில் வைரலாகும் பேனர்...!

திருமணத்தை தடுத்து நிறுத்தியவர்களுக்கு பிளக்ஸ் வைத்து நன்றி சொன்ன இளைஞர்கள்... குமரியில் வைரலாகும் பேனர்...!


திருமணத்தை தடுத்து நிறுத்தியவர்களுக்கு பிளக்ஸ் வைத்து நன்றி சொன்ன இளைஞர்கள்...   குமரியில் வைரலாகும் பேனர்...!

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். ஒரு ஆண் மகனின் வாழ்வின் வெற்றியின் தொடக்கமே அவனது திருமணம் தான். ஆனால் பெண்களை விட திருமணத்தில் ஆண்கள் சந்திக்கும் பிரச்னைகளே ஏராளம்.

சம்பளம், பழக்க வழக்கம், குடும்பப் பின்னணி, நண்பர்கள் சேர்க்கை என ஆண்களுக்கு பெண் கொடுக்கும் முன்னர் பெண் வீட்டார் மண்டை காய வைத்து விடுவார்கள். இப்படியான சூழலில் ஆண்கள் எதிர்கொள்ளும் முக்கியமான ஒரு பிரச்னை என்ன தெரியுமா? ஊர்க்காரர்களிடம் நடக்கும் விசாரிப்பு தான்...

நகரப்பகுதியில் இருப்பவர்களை விட, கிராமப் பகுதியில் இருப்பவர்கள் தான் இதில் இன்னும் சிக்கலை உணர்ந்தவர்களாக உள்ளனர். ஆம்...பெண் வீட்டார் ஊருக்குள் வந்து தங்கள் பெண்ணுக்கு பார்துள்ள மாப்பிள்ளை குறித்து விசாரிக்கும் போது புட்டு, புட்டு வைத்து விடுகின்றனர். இதனால் பல திருமணங்கள் நின்றும் போயிருக்கும்

உண்மையான தகவல்களை சொன்னாலும் கூட பரவாயில்லை. சிலர் பொய்யான தகவல்களை சொல்லி குசும்பாக திருமணத்தை நிறுத்துவது கூட நடக்கிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் கல்லுக்கூட்டம் என்னும் ஊரில் அதேபோல் தொடர்ந்து நடக்க பல இளைஞர்களுக்கு இதனால் திருமணம் நின்று போய் இருக்கிறது.

இதைப் பார்த்து கொதித்துப் போய் அந்த பகுதி இளைஞர்கள் இப்பொழுது பிளக்ஸ் ஒன்றை வைத்து இருக்கின்றனர். அதில் கல்லுக்கூட்டத்தில் வந்து விசாரிக்கும் அனைத்து திருமண வரன்களையிம் தடுத்து நிறுத்தும் அனைத்து நெஞ்சங்களுக்கும் அவர்கள் குடும்பத்திற்கும் நன்றி என போட்டு விட்டு, இனி அவரும் விளம்பரத்தில் அவர்கள் பெயர் பட்டியல் வெளியிடப்படும் என நாசூக்காக மிரட்டி உள்ளனர்.

இந்த ஏரியாவைக் கடப்பவர்கள் இந்த பிளக்ஸ் போர்டை பார்த்து சிரித்து செல்கின்றனர்.


நண்பர்களுடன் பகிர :