அப்பாவின் காதலுக்கு உதவி செய்து நெகிழ வைத்த மகள்.. ட்விட்டரில் ஹார் டாபிக்கே இப்போ இதுதான்! Description: அப்பாவின் காதலுக்கு உதவி செய்து நெகிழ வைத்த மகள்.. ட்விட்டரில் ஹார் டாபிக்கே இப்போ இதுதான்!

அப்பாவின் காதலுக்கு உதவி செய்து நெகிழ வைத்த மகள்.. ட்விட்டரில் ஹார் டாபிக்கே இப்போ இதுதான்!


அப்பாவின் காதலுக்கு உதவி செய்து நெகிழ வைத்த மகள்.. ட்விட்டரில் ஹார் டாபிக்கே இப்போ இதுதான்!

அப்பா, ஒரு பையனை காதலிக்கிறேன் என போய் நிற்கும் மகள்களை அப்பாக்கள் தண்டிக்கும் காலம் இது. அதிலும் சாதி, மதம், அந்தஸ்து என ஆயிரம் விசயங்கள் குறுக்கே நிற்கும். ஆனால் தனது அப்பாவின் காதலுக்கு, மகளே உதவிய நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

டெக்சாசைச் சேர்ந்தவர் ஜெப். 56 வயதான இவர் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவருக்கு அண்மையில் புதிதாக ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அவரை இம்பிரஸ் செய்து, அவரோடு டேட்டிங் செல்ல நாள் குறித்தார் ஜெப். ஆனால் அவருக்கு என்ன உடை அணிவது என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. உடனே தனது 19 வயது மகள் கார்லி சாவிலிடம் இதுகுறித்து ஐடியா கேட்டார்.

அப்போது அவர் தன் மகளுக்கு தான் வெள்ளை சட்டையில் டிப் டாபாக இருக்கும் புகைப்படம் ஒன்றையும் எடுத்து அனுப்பினார். இதை பார்த்த அவரது மகள் கார்லி, நீல நிறச்சட்டை ஒன்றை அணிந்து அனுப்பச் சொல்ல, அவரும் அப்படி ஒரு போட்டோ எடுத்து அனுப்பினார். உடனே இதை இன் செய்து, அதன் மேல் பெல்ட் போட்டு செல்லும்மாறு அறிவுறுத்தி இருக்கிறார் அவர் மகள்.

இப்படியாக அப்பா, மகளுக்குள் நடந்த இந்த உரையாடலையும், புகைப்பட பரிமாற்றத்தையும் ட்விட்டரில் போட்ட அவரது மகள் கார்லி, ‘’தனியாக வாழ்கிறார் அப்பா. டேட்டிங் செல்ல ஆலோசனை கேட்கிறார். என் இதயத்தில் அன்பும், சோகமும் ஒரே நேரத்தில்..”என பதிவிட்டார். இந்த ட்வீட் வைரலானது. தொடர்ந்து பலரும் இதற்கு ட்விட்டரில் பதில் சொல்லி வருகிறார்கள். அதில் பலரும் நீலநிற உடையில் இவர் மயக்குவது போல் இருப்பதாகவும் குறிப்பிட்டு உள்ளனர்.

1,70,000 லைக்களை அள்ளிய இந்த ட்வீட் பலரையும் குஷிப்படுத்த, அதே நேரம் ஜெப்க்கு அந்த டேட்டிங் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் ட்விட்டர் பயனாளிகள் அப்பா இல்லாமல், தனிமையில் வாழும் தன் அம்மாக்களின் படங்களை அதில் பதிவிட்டு வருகின்றனர்.


நண்பர்களுடன் பகிர :