அரையிறுதி போட்டியில் தவறு செய்த நடுவர்... இலங்கை நடுவரை பார்த்து முறைத்த ஜேசன் ராய்க்கு நேர்ந்த கதி..! Description: அரையிறுதி போட்டியில் தவறு செய்த நடுவர்... இலங்கை நடுவரை பார்த்து முறைத்த ஜேசன் ராய்க்கு நேர்ந்த கதி..!

அரையிறுதி போட்டியில் தவறு செய்த நடுவர்... இலங்கை நடுவரை பார்த்து முறைத்த ஜேசன் ராய்க்கு நேர்ந்த கதி..!


அரையிறுதி போட்டியில் தவறு செய்த நடுவர்... இலங்கை நடுவரை பார்த்து முறைத்த ஜேசன் ராய்க்கு நேர்ந்த கதி..!

நம்ம ஊர்களில் நாட்டாமை தீர்ப்பு முறையெல்லாம் ஒழிக்கப்பட்டு பலகாலம் ஆகிவிட்டது. அவர்கள் சொல்வது தான் தீர்ப்பு. அவர்களை எதிர்த்தவர்கள் அல்லது முறையிடுபவர்கள் அரோகதி ஆகிவிடுவதைப் பார்த்திருப்போம். கிரிக்கெட் விளையாட்டில் அம்பயர் ரோலும் அப்படித்தான் என்பதற்கு இந்த சம்பவமும் உதாரணம். இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பர்மிங்காமில் நேற்றைய தினம் ஆஸ்திரேலியா_இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம் நடந்தது. இந்த அரை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு தகுதியானது. இதில் இங்கிலாந்து பேட்டிங் செய்த போது, 20வது ஓவரில் இங்கிலாந்து வீரர் ஜோசன் ராய், கம்மின்ஸ் வீசிய பந்தை தூக்கி அடிக்க முயன்றார். ஆனால் பந்து பேட்டில் படாமலேயே விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியிடம் போனது.

ஜோசன் ராய், 85 ரன்கள் எடுத்திருந்த நிலையில், தன் கையில் பந்து வந்த உடனேயே கேரி அடுட் கேட்டார். இலங்கையை சேர்ந்த அம்பயர் குமார் தர்மசேனா உடனே விரலை தூக்கி அவுட் கொடுத்துவிட்டார். இதனால் ராய், நடுவரிடம் பந்து, தன்னுடைய பேட்டிலேயே படவில்லை என வாக்குவாதம் செய்தார். ஏற்கனவே இங்கிலாந்து அணியின் டி,.ஆர்.எஸ் வாய்ப்பும் பயன்படுத்தப்பட்டு விட்டதால் தன் குரல் எடுபடாமலேயே பெவிலியன் திரும்பினார் ஜோசன் ராய்.

இந்நிலையில் டிவி ரிப்ளே ஜோசன் கூற்று சரியானது எனவும், பந்து பேட்டில் படவில்லை எனவும் காட்டியது. ஆனால் நடுவரிடம் ஜோசன் ராய், வாக்குவாதம் செய்ததால் போட்டிக் கட்டணத்தில் 30 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இப்போ சொல்லுங்க..தப்பு இல்லை என சரியாக ராய்க்கு விதிக்கப்பட்ட அபராதம் நாட்டாமைகளின் தீர்ப்பை விட பயங்கரம் தானே!


நண்பர்களுடன் பகிர :