இடுப்பு, முதுகு, மூட்டுவலியை விரட்ட வேண்டுமா? வலிக்கு வழிகாட்டி விரட்ட இதோ ஈஸி டிப்ஸ்...! Description: இடுப்பு, முதுகு, மூட்டுவலியை விரட்ட வேண்டுமா? வலிக்கு வழிகாட்டி விரட்ட இதோ ஈஸி டிப்ஸ்...!

இடுப்பு, முதுகு, மூட்டுவலியை விரட்ட வேண்டுமா? வலிக்கு வழிகாட்டி விரட்ட இதோ ஈஸி டிப்ஸ்...!


இடுப்பு, முதுகு, மூட்டுவலியை விரட்ட வேண்டுமா?   வலிக்கு வழிகாட்டி விரட்ட இதோ ஈஸி டிப்ஸ்...!

முன்பெல்லாம் முதுகு வலி, மூட்டு வலி, இடுப்புவலி, கழுத்து வலி என்ற குரல்கள் வயோதிகர்களிடம் இருந்தே கேட்கும். ஆனால் இப்போதெல்லாம் இளம் வயதினரையும் அது விட்டுவைக்கவில்லை.

இதை சுலபமாக போக்க ஈஸியான டிப்ஸ் இதோ...இதற்கு முதலில் வெந்தயத்தை எடுத்துகொள்ள வேண்டும். இதில் அதிக அளவு மெக்னீசியமும், கால்சியமும் உள்ளது.

இது எடுக்கும் அளவில் இருந்து பாதி அளவுக்கு மிளகு எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் இருந்தும் பாதி அளவுக்கு சீரகத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இப்போது இந்த மூன்றையும் கடாயில் போட்டு லேசாக வறுக்க வேண்டும்.

வறுத்து இறக்கியதும் மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். அப்படி கடாயில் வைக்க வில்லை என்றால் நேரடியாக வெயிலில் காயவைத்தும் மிக்சியில் அரைக்கலாம்.

ஒரு ஸ்பூன் அளவுக்கு வெந்தயம், அரை ஸ்பூன் அளவுக்கு சீரகம், கால் ஸ்பூன் அளவுக்கு மிளகு எடுத்து அரைக்கலாம்.

இப்போது நாம் செய்து வைத்திருக்கும் பொடியை மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரில் சேர்த்து தினசரி காலை, மாலை என இருநேரமும் குடிக்க வேண்டும்.

முக்கியமான விஷயம் என்னவென்றால் இதை வெறும் வயிற்றில் தான் குடிக்க வேண்டும்.

இப்படி 15 நாள்கள் குடித்தாலே முதுகு வலி, இடுப்பு வலி, கழுத்துவலி என சகலவலிகளும் பறந்து விடும். முயற்சி செய்து பாருங்களேன்...

செய்முறை வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


நண்பர்களுடன் பகிர :