தடுமாறிய மனைவி... காதலனிடம் சித்ரவதை அனுபவிக்கும் குழந்தை.. தடம் மாறியதால் தடுமாறிய சோகக்கதை...! Description: தடுமாறிய மனைவி... காதலனிடம் சித்ரவதை அனுபவிக்கும் குழந்தை.. தடம் மாறியதால் தடுமாறிய சோகக்கதை...!

தடுமாறிய மனைவி... காதலனிடம் சித்ரவதை அனுபவிக்கும் குழந்தை.. தடம் மாறியதால் தடுமாறிய சோகக்கதை...!


தடுமாறிய மனைவி... காதலனிடம் சித்ரவதை அனுபவிக்கும் குழந்தை.. தடம் மாறியதால் தடுமாறிய சோகக்கதை...!

வாழ்க்கை என்பது திருப்பங்களும், சுவாரஸ்யங்களும் நிறைந்தது. அதில் அவ்வப்போது நாம் தடம் மாறிச் செல்ல வாய்ப்புகள் எழும். ஆனால் அதில் எல்லாம் சரியாக பிடித்து நிற்காவிட்டால் வாழ்க்கையே நிர்மூலமாகிவிடும் அதற்கு இந்த சம்பவம் சிறந்த உதாரணம்..

திருச்சியை சேர்ந்த மகேஷ், நெல்லையை சேர்ந்த திவ்யாவை காதலித்து மணந்தார். 2008ல் இருவீட்டையும் எதிர்த்து இந்த தம்பதி கைப்பிடித்தனர். இவர்களுக்கு 2013ல் ஆண்குழந்தை பிறந்தது. மகேஷ்க்கும், திவ்யாவுக்கும் காலப்போக்கில் கருத்து வேறுபாடு ஏற்பட கடந்த 2017ல் திவ்யா தனது மகனோடு நெல்லையில் உள்ள தாய் வீட்டுக்கு போய் விட்டார்.

தொடர்ந்து கணவரைப் பிரிந்து வாழ்ந்துவந்த திவ்யா விவாகரத்தும் கேட்டும் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. இதனிடையே மகேஷ், மனைவி திவ்யா தன்னோடு சேர்ந்து வாழ வேண்டும். குழந்தையும் தன்னோடு வாழ வேண்டும் எனக் கேட்டு திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் மகேஷ்க்கு ஆதரவாகத் தீர்ப்பு வந்தது. இந்த தீர்ப்புக்கு பின்னர் மகேஷ் நெல்லைக்கு வந்து தனது மகனை அடிக்கடி சந்தித்து வந்தார்.

இந்நிலையில் நெல்லை சரணாலயத்தில் இயங்கும் குழந்தைகள் நலகுழுவில் மகேஷ் ஒரு புகார் கொடுத்தார். அதில், ‘’என் மனைவி என்னை பிரிந்து வாழ்கிறார். அவருடன் வளரும் என் மகன் 1ம் வகுப்பு படிக்கிறான். என் மனைவி அன்சாரி என்ற ஒரு வாலிபருடன் தகாத உறவு வைத்திருக்கிறார். இது என் மானியார் சொல்லித்தான் எனக்குத் தெரியும். அவர் என் மகனை அடித்து துன்புறுத்துகிறார். இதனால் என்னுடைய மகனுக்கு உடம்பு முழுவதும் காயங்கள் இருக்கின்றன.

அவனது ஸ்கூல் ஹெட்மாஸ்டர் சொல்லித்தான் இது எனக்குத் தெரியும். இதனால் என் மகனை உடனே மீட்டு என்னோடு அழைத்துச் செல்லவும், என் மகனை அடித்த அன்சாரி மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டும். என் மனைவியின் இந்த நடவடிக்கைக்கும், அவர் இப்படி கெட்டுப் போனதற்கும் பேஸ்புக், டிக்டாக், ஸ்கைப் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் பெருக்கமே காரணம். அதை அவர் தவறாக பயன்படுத்தியதே காரணம்”என வேதனையோடு குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பெண் தடம் மாறுவது அவரது குழந்தையை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம் ஆகியுள்ளது.


நண்பர்களுடன் பகிர :