ஓகோவென வாழ்ந்த சரவண பவன் உரிமையாளர்... 71வயதில் ஏற்பட்ட பரிதாபம்..! Description: ஓகோவென வாழ்ந்த சரவண பவன் உரிமையாளர்... 71வயதில் ஏற்பட்ட பரிதாபம்..!

ஓகோவென வாழ்ந்த சரவண பவன் உரிமையாளர்... 71வயதில் ஏற்பட்ட பரிதாபம்..!


ஓகோவென வாழ்ந்த சரவண பவன் உரிமையாளர்...  71வயதில் ஏற்பட்ட பரிதாபம்..!

சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் வழக்கு தமிழகத்தில் ஏகபிரசித்தம். பட்டி,தொட்டிவரை அந்த வழக்கு பேமஸ். அதற்கு காரணம் சரவணபவன் உணவகம் மக்களிடம் ஆகி இருந்த பேமஸ் தான்!

நமக்கெல்லாம் வாய்க்கு ருசியாக சமைத்துப் போட்ட சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் இனி தனக்கு விருப்பட்டதைக் கூட சாப்பிட முடியாது. ஆம் கொலை வழக்கில் அவரை சிறைக்கு செல்ல உத்தரவு இட்டிருக்கிரது நீதிமன்றம். இதனைத் தொடர்ந்து வடபழனியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிட்சை பெற்று வந்த ராஜகோபால் ஆம்புலன்ஸ் மூலம் உயர்நீதிமன்றம் சென்றார்.

தன்னிடம் வேலை செய்தவரின் மனைவி ஜீவஜோதியின் மீது காதல்வயப்பட்ட ராஜகோபால், அதற்கு குறுக்கீடு ஆக இருந்த ஜீவஜோதியின் கணவரை கொலை செய்தார்.

இந்த வழக்கில் நீதிமன்றம் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை கொடுத்தது. இந்நிலையில் தான் நரம்பு மண்டல நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், சிறை செல்வதில் இருந்து விலக்கு அளிக்கும் படியும் மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இருந்தது.

இந்த மனுவின் மீதான விசாரணையின் போது நீதிபதி, ராஜகோபாலால் சிறையில் இருக்க.முடியாதா? ஒருநாள் கூட வெளியில் இருக்க அனுமதிக்க முடியாது. என மனுவை நிராகரித்தனர். இதனைத் தொடர்ந்து ராஜகோபால் ஆம்புலன்ஸ் மூலம் நீதிமன்றம் அழைத்து வரப்பட்டார்.

ஷ்ரெச்சரிலேயே நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறைக்கு செல்வதில் இருந்து விலக்கு கேட்டனர். ஆனால் அவர் சம்மதிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து ராஜகோபால் புழல் சிறைக்கு கொண்டு செல்லப் பட்டார்.

சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருந்த ராஜகோபால் பெண் ஆசையால் மண் ஆனது குறிப்பிடத்தக்கது


நண்பர்களுடன் பகிர :