தண்ணீர் பஞ்சத்திலும் வற்றாத கிணற்றை உடைத்த ஊர்மக்கள்.. காரணம் தெரியுமா? உருகவைக்கும் பாசப்பதிவு...! Description: தண்ணீர் பஞ்சத்திலும் வற்றாத கிணற்றை உடைத்த ஊர்மக்கள்.. காரணம் தெரியுமா? உருகவைக்கும் பாசப்பதிவு...!

தண்ணீர் பஞ்சத்திலும் வற்றாத கிணற்றை உடைத்த ஊர்மக்கள்.. காரணம் தெரியுமா? உருகவைக்கும் பாசப்பதிவு...!


தண்ணீர் பஞ்சத்திலும் வற்றாத கிணற்றை உடைத்த ஊர்மக்கள்.. காரணம் தெரியுமா? உருகவைக்கும் பாசப்பதிவு...!

மனிதர்களுக்கும், விலங்கினங்களுக்கும் உள்ள தொடர்பு வார்த்தைகளால் விவரிக்கவே முடியாதது. அது ஒருவகை பாசம் சார்ந்தது. வீட்டு விலங்கினங்கள் தான் என்று இல்லை. நம் வீட்டோடு தொடர்புடைய நாம் வளர்க்கும் பிராணிகள் தான் என்று இல்லை. சிலநேரம் நாம் வளர்க்காத மிருகங்களும் நம் மீது பாசம் செலுத்திவிடும். அப்படி ஒரு உருகவைக்கும் நிஜக்கதை தான் இது!

இலங்கையில் உள்ள ஒரு கிராமம் அது. இந்த கிராமத்தை ஒட்டிய மலைப் பகுதியில் இருந்த யானை ஒன்று ஊருக்குள் இறங்கியது. இந்த யானைக்கு ஸ்ரீலங்கா என உள்ளூர் கிராம மக்கள் பெயர் வைத்தனர். காரணம் பெயர் வைத்து அரவணைக்கும் அளவுக்கு அந்த யானை ஊர் மக்களோடு பாசப் பிணைப்பில் இருந்தது. அவர்கள் வீட்டில் ஒருவரைப் போலவே யானை சுத்தி வந்தது. ..

அன்று ஒருநாள் இரவு லங்கா யானை கிராமத்தில் சுற்றிவந்தபோது ஊர் கிணற்றில் விழுந்து விட்டது. ஒரு யானை நிற்கும் அளவுக்கு மட்டுமே இருந்த அந்த கிணற்றில் நிமிரவோ, திரும்பவோ முடியாமல் தவித்தது லிங்கா யானை. இதன் காரணமாக மயங்கியே போனது. காலையில் கிணற்றில் தண்ணீர் பிடிக்க வந்த பெண் ஒருவர், இதைப் பார்த்துவிட்டு ஊர் மக்களிடம் சொல்ல ஊரே திரண்டு வந்தது.

இது கடும் கோடைக்காலம். ஆனாலும் தண்ணீர் தட்டுப்பாடை பற்றியெல்லாம் கவலைப்படாமல் கிணற்றை ஜே.சி.பி மூலம் உடைத்து லிங்கா யானையை காப்பாற்றினர். அப்போது பெரிய,பெரிய கல்கள் விழுந்து யானைக்கு காயமும் ஏற்பட்டது. அதற்காக யானைக்கு ஊர்கூடி சிகிட்சையும் அளித்திருக்கிறது.

யானைக்காக கிணற்றையே உடைத்த இந்த பாசக்கார மக்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள் தானே?


நண்பர்களுடன் பகிர :