ஆபத்தானவர் லாஸ்லியா...நண்பர் கிளப்பிய பீதி.. கணவருடன் திருமணகோலத்தில் லாஸ்லியா படமும் வைரல்.. பிண்ணனி என்ன? Description: ஆபத்தானவர் லாஸ்லியா...நண்பர் கிளப்பிய பீதி.. கணவருடன் திருமணகோலத்தில் லாஸ்லியா படமும் வைரல்.. பிண்ணனி என்ன?

ஆபத்தானவர் லாஸ்லியா...நண்பர் கிளப்பிய பீதி.. கணவருடன் திருமணகோலத்தில் லாஸ்லியா படமும் வைரல்.. பிண்ணனி என்ன?


ஆபத்தானவர் லாஸ்லியா...நண்பர் கிளப்பிய பீதி..  கணவருடன் திருமணகோலத்தில் லாஸ்லியா படமும் வைரல்.. பிண்ணனி என்ன?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 நடந்து வருகிறது. இதில் பங்கெடுத்துள்ள இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியாவுக்கு தமிழகம் முழுவதும் பெரு ரசிகர்படை உருவாகிவிட்டது. இந்நிலையில் அவர் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் முதல் இரு சீசன்களின் வெற்றியைத் தொடர்ந்து மூன்றாவது சீசனாக பிக்பாஸ் நடந்துவருகிறது. இதில் இலங்கையின் செய்திவாசிப்பாளர் லாஸ்லியாவும் பங்கெடுத்தார். இவரது அழகில் மயங்கி இவருக்கு ஒரு கூட்டமும், திறமையில் மயங்கி ஒரு கூட்டமும் ரசிகர்களாக உள்ளனர். இவர் பெயரில் ஆர்மியும் ஆரம்பித்து, இவரின் வெற்றிக்கு தோள் கொடுத்து வருகின்றனர்.

ஒரு தரப்போ லாஸ்லியா அழகாக இருக்கிறார் ஒகே. ஆனால் அதற்காக மட்டுமே அவரை ஆதரிக்க முடியாது. அவர் பிக்பாஸ் வீட்டில் எந்த செயல்பாடுகளிலும் க;அந்து கொள்வதே இல்லை எனவும் குறைபட்டுக் கொள்கின்றனர். இந்நிலையில் ஒரு வாலிபர் ‘’லாஸ்லியாவின் ஒரிஜினல் முகத்தை பார்க்க காத்திருக்கிறேன். எங்கள் பள்ளியில் அவர்தான் ஆபத்தானவர்..”என தன் ட்விட்டரில் போட்டு இருந்தார்.

உடனே லாஸ்லியா ஆர்மியின் ரசிக கண்மணி ஒருவர், ‘’உங்களுக்கு எப்படித் தெரியும்?”எனக் கேட்டார். அதற்கு பதிவிட்டவரோ, ‘’நாங்க ஒரே ஸ்கூலில் தான்படிச்சோம். அவருக்கு விவாகரத்துகூட ஆகிவிட்டது. ஆனால் அவரது ஒரிஜினல் முகம் தெரியாமல் ஆர்மியெல்லாம் ஆரம்பிச்சு இருக்காங்க...”என போட, லாஸ்லியா ரசிகர்களுக்கு சுதி இறங்கிப் போனது.

இப்படியான சூழலில் லாஸ்லியா, ஆண் ஒருவருடன் திருமண கோலத்தில் இருக்கும் படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இப்போது அது வேண்டுமென்றே மார்பிங் செய்யப்பட்ட படம் என தெரிய வந்துள்ளது. ஆனால் வெளியில் நடப்பது எதுவுமே தெரியாமல் பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கிறார் லாஸ்லியா..

நமக்கெல்லாம் செய்தி சொன்ன லாஸ்லியாவுக்கு, அவர் குறித்த செய்தியும், பரபரப்பும் தெரியாமல் இருப்பதுதானே பிக்பாஸின் வெற்றி!


நண்பர்களுடன் பகிர :