கணவருக்கு தெரியாமல் லாட்டரி சீட்டு வாங்கிய மனைவி : அடித்தது எத்தனை கோடிகள் தெரியுமா? Description: கணவருக்கு தெரியாமல் லாட்டரி சீட்டு வாங்கிய மனைவி : அடித்தது எத்தனை கோடிகள் தெரியுமா?

கணவருக்கு தெரியாமல் லாட்டரி சீட்டு வாங்கிய மனைவி : அடித்தது எத்தனை கோடிகள் தெரியுமா?


கணவருக்கு தெரியாமல் லாட்டரி சீட்டு வாங்கிய மனைவி : அடித்தது எத்தனை கோடிகள் தெரியுமா?

தமிழகத்தில் இருந்து கேரளத்துக்கு செல்பவர்கள் நமக்கு ஏதாவது அதிர்ஷ்டம் அடித்து விடாதா என அம்மாநில லாட்டரி சீட்டை வாங்குவது வழக்கம். ஆனால் கேரளத்தை சேர்ந்த ஒரு தம்பதிக்கு வெளிநாட்டில் வைத்து லாட்டரி அதிர்ஷ்டம் அடிக்க, கூரையை பிய்த்து கொண்டு அதிர்ஷ்டம் அடிக்கும் என்பது இதுதானா? என நெட்டிசன்கள் கமெண்ட் மழை பொழிகின்றனர்.

இதுகுறித்து கூடுதல் விபரங்களை தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.’’ஐக்கிய அமீரகத்தின் அபுதாபியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த சொப்னா பொறியாளராக வேலை செய்து வருகிறார். அபிதாபியில் பிக் டிக்கெட் என்னும் பெயரில் விற்கப்படும் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கி இருக்கிறார் சொப்னா.

இவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 22 கோடி ரூபாய் பரிசு விழுந்தது. இன்ப அதிர்ச்சியில் இருந்த மீளாத சொப்னா, இதுகுறித்து தன் கணவர் பிரேமுக்கு தொலைபேசியில் சொன்னார். அதன் பின்னர் தான் மனைவி லாட்டரி சீட்டு வாங்கிய விபரமே பிரேமுக்கு தெரிந்தது. இந்த தம்பதியினருக்கு நட்சத்திரா என்னும் 5 வயது மகள் இருக்கிறாள்.

அவள் தான் எங்கள் வாழ்வின் வசந்தம். அவள் வந்த நேரம் தான் வாழ்வில் பல முன்னேற்றங்களை சந்தித்தோம். இப்போது லாட்டரியும் விழுந்துள்ளது.”என்கிறார் சொப்னா.

பொதுவாகவே கைநிறைய சம்பாதிக்கவே நம்மவர்கள் வெளிநாடு போகிறார்கள். சொப்னாவுக்கு கைநிறைய, அல்ல பை நிறைய அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது.


நண்பர்களுடன் பகிர :