புரோட்டா பிரியரா நீங்கள்? கவனம்...! புரோட்டா சாப்பிட்ட புதுமாப்பிள்ளைக்கு நடந்த பயங்கரம் தெரியுமா? Description: புரோட்டா பிரியரா நீங்கள்? கவனம்...! புரோட்டா சாப்பிட்ட புதுமாப்பிள்ளைக்கு நடந்த பயங்கரம் தெரியுமா?

புரோட்டா பிரியரா நீங்கள்? கவனம்...! புரோட்டா சாப்பிட்ட புதுமாப்பிள்ளைக்கு நடந்த பயங்கரம் தெரியுமா?


புரோட்டா பிரியரா நீங்கள்? கவனம்...! புரோட்டா   சாப்பிட்ட புதுமாப்பிள்ளைக்கு நடந்த பயங்கரம் தெரியுமா?

இன்று துரித உணவு கலாச்சாரத்தின் பெருக்கத்தால் புரோட்டா பிரியர்கள் அதிகரித்து விட்டனர். பலருக்கு பல நாள்களில் இரவுநேர உணவாக மாறி விட்டது புரோட்டா.

மைதா மாவில் செய்யப்படும் புரோட்டா உடல்நலனுக்கு மிகுந்த கேடு விளைவிக்க கூடியது. அதிகமாக புரோட்டா சாப்பிடுவோருக்கு சர்க்கரை நோய் வரும் அபாயமும் இருக்கிறது. ஆனால் இதெல்லாம் தெரிந்தும் புரோட்டோவில் இருக்கும் ருசியின் காரணமாக பலரும் அதற்கு அடிமையாக இருக்கின்றனர்.

இந்நிலையில் புரோட்டோவை பிரிதத்தோடு சாப்பிட்ட புது மாப்பிள்ளை ஒருவர் உயிரையே விட்டு இருக்கிறார். இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்...

புதுக்கோட்டை மாவட்டம் கருவக்குடியை சேர்ந்தவர் புருஷோத்தமன். தனியார் ஷோரும் ஒன்றில் சூப்பர் வைசர் பணியில் இருந்த அவருக்கும், நெல்லையை சேர்ந்த சண்முக சுந்தரி என்ற பெண்ணுக்கும் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

சண்முக சுந்தரி சில தினங்களுக்கு முன்பு நெல்லையில் இருக்கும் தன் தாய்வீட்டுக்கு போய் இருந்தார். இதனால் வீட்டில் தனியாக இருந்த புருஷோத்தமன் நேற்று இரவு வீட்டுப் பக்கத்தில் இருந்த கடையில் புரோட்டா வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அதேநேரம் கணவர் சாப்பிட்டாரா? வீட்டுக்கு வந்து விட்டாரா? என விசாரிக்க போம் போட்டார் அவரது மனைவி சண்முக சுந்தரி. அவரிடம் பேசிக் கொண்டே புரோட்டா சாப்பிட்டுக் கொண்டிருந்தார் புருஷோத்தமன்.

அப்போது அவருக்கு திடீரென புரோட்டா தொண்டையில் சிக்கியது. இதில் புரோட்டாவை முழுங்கவும் முடியாமல், துப்பவும் முடியாமல் தவித்தார் புருஷோத்தமன். கணவர் திடீர் என பேசுவதை நிறுத்தியதால் சந்தேகம் அடைந்த சண்முக சுந்தரி பக்கத்து வீட்டுக்கு போன் போட்டு விசயத்தை சொல்லி தன் கணவரை பார்த்து வரச் சொல்லி இருக்கிறார்.

அவர்கள் போய் பார்த்த போது புருஷோத்தமன் வாயில் புரோட்டா சிக்கி உயிர் இழந்தது தெரிய வந்தது. புரோட்டா என்னும் அரக்கன் இன்னும் எத்தனை உயிர் களை குடிக்க காத்திருக்கிறதோ...விழிப்படைவோம் நண்பர்களே...


நண்பர்களுடன் பகிர :