அடடே குளிப்பதில்கூட இத்தனை நன்மைகள் இருக்கா? அதிலும் இரவில் குளித்தால் பலனோ பலன்...! Description: அடடே குளிப்பதில்கூட இத்தனை நன்மைகள் இருக்கா? அதிலும் இரவில் குளித்தால் பலனோ பலன்...!

அடடே குளிப்பதில்கூட இத்தனை நன்மைகள் இருக்கா? அதிலும் இரவில் குளித்தால் பலனோ பலன்...!


அடடே குளிப்பதில்கூட இத்தனை நன்மைகள் இருக்கா? அதிலும் இரவில் குளித்தால் பலனோ பலன்...!

குளியல் என்பது நம் உடல் சுத்தத்தின் அளவீடாக மட்டுமே பார்க்கிறோம். ஆனால் அதைக் கடந்தும் அதில் நிறைய சங்கதிகள் உண்டு. காலை நேர குளியல் உடலுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். நாம் வெளியில் செல்லும் போது பிரஸ்ஸாகவும், எனர்ஜிடிக்காகவும் வைப்பதில் காலைநேரக் குளியலுக்கு முக்கியப்பங்கு உண்டு.

ஆனால் அதையெல்லாம்விட இரவில் குளிப்பது இன்னும் அதிக பலன்களைக் கொடுக்கும். இது நல்ல தூக்கத்தைக் கொடுப்பதோடு, உளவியல்ரீதியாகவும் பல நன்மைகளைச் செய்யும். நாம் நாள் முழுவதும் வெயிலில் அலைந்துவிட்டு வருகிறோம். இரவு அப்படியே நாம் தூங்கும்போது நம் முகத்தில் இருக்கும் எண்ணெய் பசையோடு, அந்த அழுக்குகள் சேர்ந்து முகப்பரு வரலாம். இரவு ஜிங்க் சோப்பை போட்டு உடலை சுத்தம் செய்வதும், குளிப்பதும் முகப்பரு வராமல் நம்மைப் பாதுகாக்கும்.

இன்னும் சிலருக்கு பருவ கால அலர்ஜி இருக்கும். இவர்கள் எல்லாம் வெளியில் போய்விட்டு வரும்போது வெகு எளிதாக கிருமிகள் இவர்களது சருமம், உடைகளின் மூலம் இல்லத்துக்கே வந்துவிடும். இதனால் தூக்க பிரச்னையும் எழும். அதே இரவில் குளித்தால் இந்த பிரச்னையும் தீர்ந்துவிடும்.

நமது சருமம் மிக ஆரோக்கியமாக இருக்க வளர்ச்சி ஹார்மோன்களின் உற்பத்தி சீராக இருக்க வேண்டும். மேலும் உடலுறவின் போது வெளிப்படும் ஹார்மோனும் சருமத்தின் மீதே பாதிப்பை ஏற்படுத்தும். இந்த இரு ஹார்மோன்களின் உற்பத்தியும் இரவில் அதிகமாக இருக்கும். இதனால் இரவில் குளிக்கையில் நம் உடலின் மேல்புறத்தில் இருக்கும் ஹார்மோன்களையும் சுத்தம்செய்து, அவற்றை சமநிலையில் வைக்கிறது.

அதேபோல் இரவில் குளிக்கையில் நம் முடிக்கும் அது ரொம்ப நல்லது. ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்ள பேருதவி செய்கிறது. இது முடிவள்ர்ச்சியையும் அதிகரிக்கும். அப்போ இனி இரவிலும் குளிப்பீங்க தானே?


நண்பர்களுடன் பகிர :