யூடியூப்பை பார்த்து உயிரையே விட்ட குழந்தை... அதிர்ச்சி ரிப்போர்ட்... பெற்றோர்களே கொஞ்சம் பிள்ளைகளின் மீது கண்வைங்க! Description: யூடியூப்பை பார்த்து உயிரையே விட்ட குழந்தை... அதிர்ச்சி ரிப்போர்ட்... பெற்றோர்களே கொஞ்சம் பிள்ளைகளின் மீது கண்வைங்க!

யூடியூப்பை பார்த்து உயிரையே விட்ட குழந்தை... அதிர்ச்சி ரிப்போர்ட்... பெற்றோர்களே கொஞ்சம் பிள்ளைகளின் மீது கண்வைங்க!


யூடியூப்பை பார்த்து உயிரையே விட்ட குழந்தை... அதிர்ச்சி ரிப்போர்ட்... பெற்றோர்களே கொஞ்சம் பிள்ளைகளின் மீது கண்வைங்க!

இன்று பச்சைக் குழந்தைகள் வரை கையில் செல்போனைக் கொடுத்தால் தான் சாப்பிடுவேன் என அடம்பிடிக்கிறது. பெற்றோரும் தங்களை தொந்தரவு செய்யாமல் இருந்தால் போதும் என செல்போனை குழந்தைகளின் கையில் கொடுத்துவிடுகின்றனர். அப்படி செல்போனில் யூடீயூப்பை ரெகுலராக பார்த்து வந்த ஒரு குழந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூரைச் சேர்ந்தவர் ரதோட். இவருக்கு 12 வயதில் ஷிகா என்ற மகள் உள்ளார். ஷிகா எப்போதுமே தன் தந்தையின் செல்போனை எடுத்து யுடீயூப் பார்ப்பது வழக்கம். சமீபகாலமாக அப்படி அவர் யுடீயூப்பை பார்க்கையில் ‘’தற்கொலை” தொடர்பான வீடீயோக்களை அதிகம் பார்த்து இருக்கிறார்.

இதுகுறித்து அவரது தாயாரிடமும் ஷிகா சொல்லி இருக்கிறார். ஆனால் அவர் ஏதோ சொல்கிறார் என நினைத்து அதை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை.

இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது எலாஸ்டிக் கயிற்றால் மின்விசிறியில் தூக்குப் போட்டு தொங்கி விட்டாள் ஷிகா. இதை இன்னொரு அறையில் இருந்த அவரது சகோதிரி பார்த்து கத்த, அக்கம்பக்கத்தினர் வந்து தூக்கில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை நாக்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு போனார்கள். ஆனால் ஷிகா சிகிட்சை பலனின்றி இறந்து போனார்.

குழந்தைகளின் கையில் யூடியூப்பை போட்டுக் கொடுத்துவிட்டு ரிலாஸ்டாக இருக்கும் பெற்றோருக்கு பாடம் நடத்தி உயிரை விட்டிருக்கிறார் ஷிகா. இதுவே இப்படி இறந்த கடைசி குழந்தையாக இருக்கட்டும். பெற்றோரே உஷார்!


நண்பர்களுடன் பகிர :