மூன்றாண்டுகளுக்கு முன்பு மாயமான கணவன்: டிக்டாக்கால் கண்டுபிடித்த மனைவி. எங்கே இருந்து கிடைத்தார் தெரியுமா? ஷாக்கான குடும்பத்தினர்..! Description: மூன்றாண்டுகளுக்கு முன்பு மாயமான கணவன்: டிக்டாக்கால் கண்டுபிடித்த மனைவி. எங்கே இருந்து கிடைத்தார் தெரியுமா? ஷாக்கான குடும்பத்தினர்..!

மூன்றாண்டுகளுக்கு முன்பு மாயமான கணவன்: டிக்டாக்கால் கண்டுபிடித்த மனைவி. எங்கே இருந்து கிடைத்தார் தெரியுமா? ஷாக்கான குடும்பத்தினர்..!


மூன்றாண்டுகளுக்கு முன்பு மாயமான கணவன்: டிக்டாக்கால் கண்டுபிடித்த மனைவி. எங்கே இருந்து கிடைத்தார் தெரியுமா? ஷாக்கான குடும்பத்தினர்..!

டிக்டாக் உள்ளிட்ட சோசியல் மீடீயாக்களினால் நன்மையும் இருக்கிறது. தீமையும் இருக்கிறது. அப்படி டிக்டாக்கினால் நடந்த நன்மையில் ஒன்று இது!

மூன்றாண்டுகளுக்கு முன்னர் மாயமான தன் கணவரை, டிக்டாக் மூலம் கண்டுபிடித்து இருக்கிறார் அவரது மனைவி. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

விழுப்புரம், வள்ளுவர்ரெட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரதா. கடந்த 2013ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் பூந்தமல்லியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரோடு இவருக்கு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு இருபெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 2014 ம் ஆண்டு மனைவி, குழந்தைகளை தவிக்கவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய சுரேஷ் அதன் பின்னர் வீட்டுக்கு வரவில்லை.

இதுதொடர்பாக ஜெயப்பிரதா விழுப்புரம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். மூன்று ஆண்டுகளாக போலீஸாரும், குடும்பத்தினரும் தேடியும் சுரேஷ் எங்கு இருக்கிறார் என்ற விபரம் தெரியவில்லை. இந்நிலையில் சமீபத்தில் டிக்டாக் வீடீயோவில் திருநங்கை ஒருவருடன் சேர்ந்து சுரேஷ் ஆடும் வீடீயோவை அவரது உறவினர்கள் பார்த்தனர். அவர்கள் அதை ஜெயப்பிரதாவிடம் காட்ட அவர் ஷாக்கானார்.

தொடர்ந்து ஜெயப்பிரதா இவ்விசயத்தை விழுப்புரம் இன்ஸ்பெக்டர் ராஜன் கவனத்துக்கு கொண்டு சென்றார். இதைத் தொடர்ந்து விழுப்புரத்தில் உள்ள திருநங்கை அமைப்புகளிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் வீடீயோவில் இருப்பது ஓசூரை சேர்ந்த திருநங்கை எனத் தெரிய வந்தது. போலீஸார் அங்கு சென்று பார்த்த போது, சுரேஷ் அந்த திருநங்கையுடன் குடித்தனம் நடத்தி வந்தது தெரியவந்தது.

போலீஸார் நடத்திய விசாரணையில், வீட்டில் இருந்து சென்றபின், சுரேஷ் தனியார் டிராக்டர் கம்பெனியில் வேலை பார்த்ததாகவும், அங்கு வைத்துத்தான் இந்த திருநங்கையோடு பழக்கம் வந்தது என்பதும் தெரிய வந்தது. அங்கிருந்து போலீஸார் சுரேஷை மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


நண்பர்களுடன் பகிர :