இருஆண்டுகளாக 370 வியூஸில் இருந்த லாஸ்லியா வாசித்த நியூஸ்... தற்போது எத்தனை Views தெரியுமா..? Description: இருஆண்டுகளாக 370 வியூஸில் இருந்த லாஸ்லியா வாசித்த நியூஸ்... தற்போது எத்தனை Views தெரியுமா..?

இருஆண்டுகளாக 370 வியூஸில் இருந்த லாஸ்லியா வாசித்த நியூஸ்... தற்போது எத்தனை Views தெரியுமா..?


இருஆண்டுகளாக 370 வியூஸில் இருந்த லாஸ்லியா வாசித்த நியூஸ்...  தற்போது எத்தனை Views தெரியுமா..?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தவர்கள் புகழின் உச்சிக்கு சென்றார்களோ இல்லையோ, ஆனால் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் காலத்தில் அவர்களின் இமேஜ் விறு, விறுவென வளர்வது வாடிக்கையாக இருக்கிறது.

ஓவியா, ஆரவ் என பலரும் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த போது புகழின் உச்சத்தில் இருந்தனர். ஆனால் வெளியில் வந்த பின்னர் அவர்களுக்கு அந்த அளவுக்கு பட வாய்ப்புகள் அமையவில்லை, ஆனால் பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் காலத்தில் இவர்கள் புகழின் உச்சிக்கே போய் விட்டனர். அதேபோல் இப்போது இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியாவுக்கு புகழ் கிடைத்து வருகிறது.

இலங்கையைச் சேர்ந்த பிரபல செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கிறார். இவரது நடவடிக்கைகள் தமிழக மக்களிடம் வரவேற்பை பெற்று இருக்கிறது. இளைஞர்கள் இவர் பெயரில் ஆர்மியும் அமைத்து, சோசியல் மீடீயாக்களில் இவருக்காக ஆதரவு திரட்டி வருகின்றனர்.

ரசிகர்களின் அன்புக்கு சாட்சியாக பிரபல நகைச்சுவை நடிகர் சதீஸே ஒரு வீடீயோ வெளியிட்டார். இதற்கு இன்னொரு சாட்சியாக இன்னொரு சம்பவம் நடந்துள்ளது. இரு ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் உள்ள நியூஸ் 1 என்கிற செய்திச் சேனலுக்கு லாஸ்லியா வாசித்த செய்தி இணையத்தில் இருந்தது. கடந்த இரு ஆண்டுகளாகவே வெறும் 370 பார்வையாளர்களால் மட்டுமே பார்க்கப்பட்டு இருந்த அந்த வீடீயோ இப்போது நான்கரை லட்சம் பார்வையாளர்களை தாண்டியுள்ளது.

இப்போ புரியுதா பிக்பாஸோட மாஸ் என்பதா? அல்லது பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் லாஸ்லியாவின் மாஸ் என்பதா?


நண்பர்களுடன் பகிர :