அமலாபாலின் முன்னாள் கணவருக்கு டும்..டும்..டும்.. இயக்குநர் ஏ.எல்.விஜய் திருமணம் செய்யப் போவது இவரைத்தான்..! Description: அமலாபாலின் முன்னாள் கணவருக்கு டும்..டும்..டும்.. இயக்குநர் ஏ.எல்.விஜய் திருமணம் செய்யப் போவது இவரைத்தான்..!

அமலாபாலின் முன்னாள் கணவருக்கு டும்..டும்..டும்.. இயக்குநர் ஏ.எல்.விஜய் திருமணம் செய்யப் போவது இவரைத்தான்..!


அமலாபாலின் முன்னாள் கணவருக்கு டும்..டும்..டும்.. இயக்குநர் ஏ.எல்.விஜய் திருமணம் செய்யப் போவது இவரைத்தான்..!

இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கு அறிமுகமே தேவை இல்லை. குடும்பப் பாங்கான படங்களை இயக்குவதில் கில்லாடி என பெயர் எடுத்தவர். தல அஜித்குமார் நடித்த ‘கிரீடம்’, ஜெயம்ரவி நடித்த ‘வனமகன்’ என ஏராளம் ஹிட் கொடுத்தவர்.

இவர் பிரபல திரைப்பட நடிகையான அமலாபாலை காதலித்து திருமணம் செய்தார். ஆனா;ல் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.

அதன் பின்னர் ராட்சசன் படத்தில் தன்னோடு நடித்த விஷ்ணு விசாலுக்கும், அமலாபாலுக்கும் காதல் மலர்ந்துவிட்டதாக வெளியில் கசிந்தது. ஆனால் இருவருமே அதை மறுத்தனர்.

இந்நிலையில் அமலாபாலின் முன்னாள் கணவரும், பிரபல இயக்குனருமான ஏ.எல்.விஜய்க்கு இரண்டாவது திருமணம் நடக்க இருக்கிறது. தற்போது இந்தி நடிகை கங்கனா ரனாவத்தை வைத்து ஜெயலலிதா வாழ்க்கை வரலாறை ‘தலைவி’ என்னும் பெயரில் இயக்க உள்ள விஜய், இப்போது திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண் மருத்துவர். சென்னையில் பொதுநல மருத்துவராக இருக்கும் அவர் பெயர் ஜஸ்வர்யா.

இருவீட்டார் சம்மதத்துடன் நடக்க இருக்கும் இந்த திருமணத்தால் ஏ.எல்.விஜய் மீண்டும் மணமகன் ஆகியிருக்கிறார்.


நண்பர்களுடன் பகிர :