ஒரே இரவில் உங்கள் கால்களில் பித்தவெடிப்பு போகணுமா? இந்த சூப்பர் டிப்ஸை ட்ரை பண்ணுங்க...! Description: ஒரே இரவில் உங்கள் கால்களில் பித்தவெடிப்பு போகணுமா? இந்த சூப்பர் டிப்ஸை ட்ரை பண்ணுங்க...!

ஒரே இரவில் உங்கள் கால்களில் பித்தவெடிப்பு போகணுமா? இந்த சூப்பர் டிப்ஸை ட்ரை பண்ணுங்க...!


ஒரே இரவில் உங்கள் கால்களில் பித்தவெடிப்பு போகணுமா? இந்த சூப்பர் டிப்ஸை ட்ரை பண்ணுங்க...!

தண்ணீரில் நின்று அதிக நேரம் வேலை பார்ப்பவர்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்னை கால்களில் பித்த வெடிப்பு என்னும் பாதவெடிப்பு தாக்குவது தான். இதுவீட்டில் இல்லத்தரசிகளையும் அதிக அளவில் தாக்கும். பித்தவெடிப்பை ஆரம்பத்திலேயே கவனிக்கா விட்டால் கால் பகுதியில் தோல் வெடிக்க ஆரம்பித்துவிடும். அதிலிருந்து ரத்தக்கசிவு ஏற்படும். அது பயங்கர வலியை உருவாக்கும். அப்படி ரத்தக்கசிவு வருபவர்கள் நீங்களாக மற்றவர்களுக்கான மருத்துவக் குறிப்பு இது.

வீட்டில் இருக்கும் எளிய பொருள்களை வைத்து பித்தவெடிப்பை இதன் மூலம் ஒரே இரவில் குணப்படுத்தி விடலாம்.

முதலில் ஒரு தூய்மையான பவுளை எடுத்து அதில் ஒரு ஸ்பூன் அளவுக்கு கடுகு எண்ணெயை சேர்க்க வேண்டும். இதனோடு ஒரு ஸ்பூன் அளவுக்கு தேங்காய் எண்ணெய் சேர்க்க வேண்டும். இதனோடு ஒரு ஸ்பூன் அளவுக்கு வேஸ்லின் சேர்க்க வேண்டும். இதனோடு இரண்டு கற்பூரத்தை எடுத்து, பொடி செய்து சேர்க்க வேண்டும். இதை எல்லாவற்றையும் சேர்த்து கலக்க வேண்டும்.

இப்போது இது திரவ வடிவில் இருக்கும். ஆனால் சிறிதுநேரம் கழித்து காய்ந்துவிடும். இந்த கலவையை ஒருமுறை தயாரித்து ப்ரிட்ஜில் வைத்துவிட்டால் 15 நாள்கள் வரை பயன்படுத்தலாம்.

இரவு, தூங்குவதற்கு முன்பு பாதவெடிப்பு பிரச்னை இருக்கும் உங்கள் கால்களை சுடுதண்ணீரில் பத்துநிமிடம் ஊறவைக்க வேண்டும். இந்த தண்ணீர் வெதுவெதுப்பான சூட்டில் இருக்க வேண்டும். அதன் பின்னர் நன்றாக சோப்பு போட்டு பாதங்களை கழுவ வேண்டும்.

அதன் பின்னர் பாத வெடிப்பு(பித்த வெடிப்பு) இருக்கும் பகுதியில் நாம் தயாரித்து வைத்திருக்கும் பேஸ்டைத் தடவ வேண்டும். அதன் பின்னர் கால்களில் ஷாக்ஸ் போட்டு தூங்கலாம். எதற்காக ஷாக்ஸ் போடுகிறோம் என்றால் இந்த மருந்தின் மீது காற்றுப்படக் கூடாது. மறுநாள் காலையில் எழுந்து பார்த்தால் நல்ல மாற்றத்தை உணரமுடியும். இந்த கலவையை ஒருவாரம் தொடர்ந்து போட்டுப் பாருங்கள். பாத வெடிப்பு மறைந்து, உங்கள் கால்களே அழகாகி இருக்கும்.


நண்பர்களுடன் பகிர :