ஓவியாவையே ஓவர்டேக் செய்யும் லாஸ்லியா... தாத்தா உருகும் வீடீயோவை வெளியிட்ட நடிகர் சதீஸ்..! Description: ஓவியாவையே ஓவர்டேக் செய்யும் லாஸ்லியா... தாத்தா உருகும் வீடீயோவை வெளியிட்ட நடிகர் சதீஸ்..!

ஓவியாவையே ஓவர்டேக் செய்யும் லாஸ்லியா... தாத்தா உருகும் வீடீயோவை வெளியிட்ட நடிகர் சதீஸ்..!


ஓவியாவையே ஓவர்டேக் செய்யும் லாஸ்லியா... தாத்தா உருகும் வீடீயோவை வெளியிட்ட நடிகர் சதீஸ்..!

பிக்பாஸ் சீசன் 3 விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கின்றது. பிக்பாஸ் என்றாலே பச்சைக் குழந்தை முதல், பல் இல்லாத பொக்கைவாய் தாத்தா வரை ஓவியா...ஓவியா என்றே சொல்லி வந்தனர். அவர் பெயரில் ஆர்மியெல்லாம் துவங்கி பலம் காட்டினர். ஆனால் அதற்கு, அந்த பெயர் எடுக்க ஓவியாவுக்கு சில நாள்களாவது ஆனது. ஆனால் லாஸ்லியா அந்த பெயரை நிகழ்ச்சி துவங்கி ஒரே வாரத்தில் எடுத்து விட்டார்.

அதை மெய்ப்பிக்கும் வகையில் பிரபல நகைச்சுவை நடிகர் சதீஸ், வீடீயோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் என்ன இருக்கிறது என தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

இலங்கையை சேர்ந்த பிரபல செய்தி வாசிப்பாளர் தான் இந்த லாஸ்லியா. இவருக்கு திரைப்பிரபலங்கள் பலருமே வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான், தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் சதீஸ்.

அதில், ‘’ஒரு மரத்து மூட்டில் இருந்து, ஒரு கிராமத்து வயதான பெரியவரிடம் நடிகர் சதீஸ், உங்களுக்கு பத்மினி பிடிக்குமா? அஞ்சலிதேவி பிடிக்குமா என கேட்கிறார். அதற்கு அந்த தாத்தா லாஸ்லியா” என்கிறார். இந்த வீடீயோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :