இன்றைய தொகுப்பாளர்களுக்கெல்லாம் முன்னோடி.. ஆனந்த கண்ணன் இப்போது என்ன செய்கிறார் தெரியுமா? Description: இன்றைய தொகுப்பாளர்களுக்கெல்லாம் முன்னோடி.. ஆனந்த கண்ணன் இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

இன்றைய தொகுப்பாளர்களுக்கெல்லாம் முன்னோடி.. ஆனந்த கண்ணன் இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?


இன்றைய தொகுப்பாளர்களுக்கெல்லாம் முன்னோடி.. ஆனந்த கண்ணன் இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

இன்று இணைய உலகம் ஆகிவிட்டது. இன்றெல்லாம் கையில் மொபைல் கேமரா வைத்திருக்கும் ஒவ்வொருவருமே தொகுப்பாளர்கள் தான் என்று சொல்லும் அளவுக்கு புகுந்து விளையாடுகிறார்கள். அதேபோல் இப்போது முகநூல், வாட்ஸப், டிக்டாக் என சோசியல் மீடீயாக்கள் பிரபலமாகிவிட்டதால் அனைவருக்கும் பிரபலம் ஆகும் வாய்ப்புகளும் கிடைக்கிறது.

ஆனால் இதெல்லாம் தலைதூக்குவதற்கு முன்னரே தொகுப்பாளராக கோலோச்சியவர் ஆனந்த கண்ணன். சிங்கப்பூரை சேர்ந்த தமிழரான இவர் அங்குள்ள வசந்தம் என்னும் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். தொடர்ந்து ரேடியோசிட்டி எப்.எல்மில் ஜாக்கியாக இருந்த ஆனந்த கண்ணன் குடும்பத்துடன் சென்னைக்கு ஷிப்ட் ஆனார். தொடர்ந்து சன் மியூச்சில் வீடீயோ ஜாக்கியாக தேர்வானார். இந்த சேனலில் இவர் தொகுத்து வழங்கிய ஜோடிப் பொருத்தம் இவரை புகழின் உச்சிக்கே கொண்டு போனது. பெண்களிடத்தில் மாஸ் ஹீரோ போல் இடம் பிடித்தார் ஆனந்த கண்ணன்.

சிந்துபாத் என்ற பெயரில் சண்டிவியில் ஒளிபரப்பான சீரியலில் நடித்த இவர் குழந்தைகளின் மனதைக் கவர்ந்தார். விக்கிரமாதித்தனர் தொடரும் இவர் நடிப்பில் ஹிட் அடித்தது. 2012ல் அதிசய உலகம் என்னும் 3டி படத்திலும் நடித்தார். வெங்கட்பிரபு இயக்கிய சரோஜா படத்திலும் தலைகாட்டினார். இதனைத் தொடர்ந்து இத்தனை நாளாய் எங்கிருந்தாய் என்னும் படத்திலும் ஹீரோ வேசம் கட்டினார். ஆனால் இப்படியெல்லாம் விரு, விருவென வளர்ந்து வந்த ஆனந்த கண்ணன், நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் என்பது போல் திடீர் என லைம் லைட்டில் இருந்து காணாமலே போனார்.

தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாததால் குடும்பத்துடன் சிங்கப்பூருக்கே போய் விட்ட ஆனந்த கண்ணன், மீண்டும் தான் முதன் முதலில் வேலை செய்த வசந்தம் டிவியிலேயே மீண்டும் சேர்ந்து தொகுப்பாளர் ஆகிவிட்டார். இப்போது திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகளுக்கும் தந்தையாகி இருக்கிறார் ஆனந்த கண்ணன்.


நண்பர்களுடன் பகிர :