உயிருடன் கரை ஒதுங்கிய ஆபத்தான பாம்புமீன்... ஆபத்தின் அறிகுறி என அச்சப்படும் மக்கள்..! Description: உயிருடன் கரை ஒதுங்கிய ஆபத்தான பாம்புமீன்... ஆபத்தின் அறிகுறி என அச்சப்படும் மக்கள்..!

உயிருடன் கரை ஒதுங்கிய ஆபத்தான பாம்புமீன்... ஆபத்தின் அறிகுறி என அச்சப்படும் மக்கள்..!


உயிருடன் கரை ஒதுங்கிய ஆபத்தான பாம்புமீன்... ஆபத்தின் அறிகுறி என அச்சப்படும் மக்கள்..!

கடல் எப்போதும் ஆச்சர்யங்கள் நிகழ்ந்தது. வழக்கத்தை விட கடல் உள்வாங்கியிருந்ததை மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்த நாள்கள் உண்டு. அதன் பின்னர் தான் சுனாமி என்னும் ஆழிப்பேரலை ஏற்பட்டது. அதன் பின்னர் இப்போதெல்லாம் கடல் உள்வாங்கினால் மக்கள் அச்சத்துடன் பார்க்கத் துவங்கினர்.

அதேபோல் இப்போதும் ஒரு விசயம் நடக்க, இதை ஆபத்தின் அறிகுறி என மக்கள் அச்சத்துடன் சொல்லத் துவங்கி இருக்கின்றனர். தனுஷ்கோடி கடற்கரையில் உயிருடன் அஞ்சாலை மீன் கரை ஒதுங்கியுள்ளது. இந்த மீனின் தலைபாகமும், உடலும் பாம்பு போலவே இருக்கும். இது கடலில் வாழும் மற்ற உயிரினங்களுக்கு மட்டுமல்லாது, மீனவர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கக் கூடியது.

பொதுவாக இந்த பாம்பு போன்ற தோற்றமுடைய அஞ்சாலை மீனின் வாய் பெரிதாகவும், பற்கள் கூர்மையாகவும் இருக்கும். இது கடித்தால் வாய்க்குள் சிக்கும் சதைப்பகுதி முழுதையுமே தனியாக எடுத்துவிடும். இந்த ரக மீன்கள் கடலில் வலை போடும் மீனவர்களின் வலையில் சிக்கிவிட்டால் உடனே இதனை பாதுகாப்பாக அகற்றி கடலில் போட்டு விடுவது வழக்கம். குறைவான ஆழம் கொண்ட கடல்பகுதியில் வாழும் அஞ்சாலை மீன்கள் சில சமயம் கடல் அலையோடு சேர்ந்து கரை ஒதுங்குவதுண்டு. இந்நிலையில் அதேபோல் தனுஷ்கோடியில் அஞ்சாலை மீன் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. மூன்றடி நீளத்தில் இருந்த இந்த மீனின் அருகில் யாரும் செல்ல வேண்டாம் என மீனவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

ஆனாலும் அதன் அபாயம் தெரியாமல் சுற்றுலாப் பயணிகள் அதை தங்கள் மொபைலில் படம் எடுத்து மகிழ்ந்தனர். ஆனாலும் அஞ்சாலை மீன் கரை ஒதுங்கியது ஏதேனும் ஆபத்தின் அறிகுறியாக இருக்குமோ என மக்கள் சந்தேகிக்கின்றனர்.


நண்பர்களுடன் பகிர :