வறுமையினால் படிக்கும்போது இலந்த பழம் விற்ற பெண்... இன்று பல லட்சம் ரசிகர்களின் மனம் கவர்ந்த பாடகி...! Description: வறுமையினால் படிக்கும்போது இலந்த பழம் விற்ற பெண்... இன்று பல லட்சம் ரசிகர்களின் மனம் கவர்ந்த பாடகி...!

வறுமையினால் படிக்கும்போது இலந்த பழம் விற்ற பெண்... இன்று பல லட்சம் ரசிகர்களின் மனம் கவர்ந்த பாடகி...!


வறுமையினால் படிக்கும்போது இலந்த பழம் விற்ற பெண்... இன்று பல லட்சம் ரசிகர்களின் மனம் கவர்ந்த பாடகி...!

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பதிவு செய்யப்பட்டு கொண்டிருக்கிறது. இப்போது பாட வந்திருந்தார் சுகந்தி. ‘’வாடி ராசாத்தி” பாடலை செமையாக அவர் பாட, இந்த பாட்டை நீங்களே திரையிலும் பாடியிருக்கலாம். அந்த அளவுக்கு கனகச்சிதமாக பாடிவிட்டீர்கள் என்று நடுவர் குழுவே பாராட்டு மழையில் நனைய வைத்துவிட்டது.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடும் சுகந்திக்கு என்று மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. இந்நிலையில் இந்த சுகந்தியின் கடந்தகால அனுபவத்தை அவர் இந்த வாரம் நிகழ்ச்சியில் பகிர்ந்திருக்கிறார். கஷ்ட சூழலில் வளர்ந்திருக்கிறார் சுகந்தி. அவரையும், அவரோடு பிறந்த தன் குழந்தைகளையும் வளர்ப்பதற்காக சுகந்தியின் தாயார் கட்டிட வேலைக்கு சித்தாளாகக் கூட போய் இருக்கிறார்.

குடும்ப கஷ்டத்தை உணர்ந்த சுகந்தியும் தான் படித்த பள்ளியிலேயே இலந்தைப் பழம் விற்பது தொடங்கி, விடுமுறைகளில் வடகம் போட்டு வீடு, வீடாகப் போய் விற்பது வரையிலான வேலைகளை செய்திருக்கிறார். இதையெல்லாம் அவரும், அவரது தாயாரும் கண்ணீர் மல்க பேசும் ப்ரோமோவை வெளியிட்டு இருக்கிறது விஜய் டிவி. இதை லட்சக்கணக்காணோர் பார்த்திருக்கின்றனர்.

சுகந்தியின் லட்சியம் சினிமாவில் பாடுவது தானாம். அந்த லட்சியம் நிறைவேறவும் பிரார்த்தனை செய்வதாக கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.


நண்பர்களுடன் பகிர :