சென்னை மக்களை நினைத்து வேதனைப்பட்ட டைட்டானிக் ஹீரோ ஜாக்.... நமக்காக உருகிய ஹாலிவுட் நடிகர்...! Description: சென்னை மக்களை நினைத்து வேதனைப்பட்ட டைட்டானிக் ஹீரோ ஜாக்.... நமக்காக உருகிய ஹாலிவுட் நடிகர்...!

சென்னை மக்களை நினைத்து வேதனைப்பட்ட டைட்டானிக் ஹீரோ ஜாக்.... நமக்காக உருகிய ஹாலிவுட் நடிகர்...!


சென்னை மக்களை நினைத்து வேதனைப்பட்ட டைட்டானிக் ஹீரோ ஜாக்....  நமக்காக உருகிய ஹாலிவுட் நடிகர்...!

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகின்றது. தண்ணீரின் முக்கியத்துவத்தை மக்கள் இப்போது தான் உணரத் துவங்கி உள்ளனர். மரங்களை அழித்துவிட்டு கட்டுப்பாடு இல்லாமல் கட்டுமானங்கள் எழுப்பியதன் கோர தாண்டவத்தை சென்னை இப்போது உணர்ந்து இருக்கிறது.

சென்னை மக்கள் தண்ணீர் இன்றி தவிப்பது குறித்து பி.பி.சி செய்தி நிறுவனம் அண்மையில் செய்தி வெளியிட்டு இருந்தது. இந்த பதிவை உலகப்புகழ் பெற்ற டைட்டானிக், தி ரெவன்னத் படங்களின் நாயகன் ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ பார்த்து இருக்கிறார். இதைப் பார்த்து மிகுந்த வேதனை அடைந்த அவர், தனது இன்ஷ்டாகிராம் பக்கத்தில் அதை வேதனை ததும்ப பதிவு செய்து இருக்கிறார்.

அவரது நிஜபெயரே தெரியாத அளவுக்கு உலகம் முழுவதிலும் இருப்பவர்களிடம் ஜாக் என்னும் பெயரிலே இதய சிம்மாசனத்தில் அமர்ந்த அந்த மகத்தான கலைஞனின் வேதனைப்பதிவின் தமிழாக்கம் இதுதான்...

"மழையால் மட்டுமே சென்னையைக் காப்பாற்ற முடியும். கிணறுகள் வறட்சி அடைந்து முற்றிலும் தண்ணீர் இல்லாத நகரமாக அது இருக்கிறது. சென்னையில் நான்கு முக்கிய தண்ணீர் தேக்கங்கள் முற்றிலும் வறண்ட நிலையில் இருக்கிறது.

மக்கள் மணிக் கணக்கில் காத்து இருந்து அரசுதரும் குடிநீரை பெறுகின்றனர். சென்னையின் பல உணவகங்கள் தண்ணீர் பஞ்சத்தால் தற்காலிகமாக மூடப்பட்டு இருக்கிறது. தண்ணீர் பஞ்சத்தை தவிர்க்க அதிகாரிகள் மாற்று நீராதார திட்டங்களை கண்டறிந்து வருகின்றனர். சென்னை மக்கள் மழைக்காக பிரார்த்தனை செய்கின்றனர்." என அதில் குறிப்பிட்டு இருக்கிறார்.

ஆழ்கடலில் தண்ணீருக்கு மத்தியில் காதலியின் உயிரைக் காப்பாற்றிய ஜாக், சென்னை மக்களின் தண்ணீர் பிரச்னைக்கு உருகிய நிகழ்வு உலக அளவில் வைரலாகி வருகிறது..


நண்பர்களுடன் பகிர :