இரத்தமே வியர்வையாக வெளிவரும் அதிசய பெண்... மெடிக்கல் மிராக்கிள் பெண்ணை ஆய்வு செய்யும் மருத்துவர்கள்...! Description: இரத்தமே வியர்வையாக வெளிவரும் அதிசய பெண்... மெடிக்கல் மிராக்கிள் பெண்ணை ஆய்வு செய்யும் மருத்துவர்கள்...!

இரத்தமே வியர்வையாக வெளிவரும் அதிசய பெண்... மெடிக்கல் மிராக்கிள் பெண்ணை ஆய்வு செய்யும் மருத்துவர்கள்...!


இரத்தமே வியர்வையாக வெளிவரும் அதிசய பெண்...  மெடிக்கல் மிராக்கிள் பெண்ணை ஆய்வு செய்யும் மருத்துவர்கள்...!

மனித உடலே பல அதியத்தன்மை கொண்டது. ஆம்...மனித உடலுக்குள் பல ஆச்சர்யமான விசயங்கள் இருக்கின்றன. அவைகளில் சில வேறுபாடுகள் நிகழும்போதே நம் உடலில் நோய்கள் தாக்குகின்றன.

அந்தவகையில் வெளிநாட்டு பெண் ஒருவரின் உடலில் நடந்த மாற்றம் ஒட்டுமொத்த மருத்துவ உலகையும் அவரை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்து இருக்கிறது. அப்படி அவர் உடலில் என்ன பிரச்னை என்று யோசனை செய்கிறீர்கள் தானே? மனிதர்கள் அனைவருக்கும் வியர்வை இயல்பான ஒன்று தான். ஆனால் ஒரு பெண்ணுக்கு ரத்தமே வியர்வையாக வெளியேறும் அதிசயம் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது.

தற்போது 21 வயதாகும் அந்த பெண்ணுக்கு முகம், கை ஆகிய இடங்களில் தான் இப்படி வியர்வை ரத்தமாக வெளியேறி வருகிறது. உண்மையில் அவரை மிகவும் ஆச்சர்யத்தோடே அணுகுகிறது மருத்துவ உலகம். இத்தாலியை சேர்ந்த அந்த பெண்ணுக்கு எவ்வித காயமும் இன்றி வியர்வையாக ரத்தம் வருவதும், அதிலும் இரவுநேரத்தில் தூங்கும்போது அதிகப்படியான ரத்தம் வியர்வையாக போவதும் இத்தாலி மருத்துவர்களை கடும் குழப்பத்தில் ஆழ்த்தியது.

கடந்த மூன்று ஆண்டுகளாக வியர்வையைப் போல் ரத்தம் வெளியேறும் பிரச்னையில் தவித்து வருகிறார் அந்த பெண். அதிலும் இரவு நேரங்களில் வியர்வையைப் போல் இப்படி ரத்தம் வெளியேறும் பிரச்னை ஒரு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் வரை நீடிப்பதாகவும் கூறுகிறார்.

அந்த பெண்ணுக்கு ஹெமடோஹிட்ராசிஷ் என்னும் பிரச்னை இருப்பதுதான் இப்படி ரத்தம் வெளியே வியர்வையாக வெளி செல்வதற்கு முக்கியக் காரணம் என மருத்துவர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

அதே நேரம் இது முற்றிலும் குணப்படுத்த கூடிய நோய் அல்ல எனவும், மருந்து, மாத்திரைகள் மூலம் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். அதிக அழுத்தம், பயம் ஆகியவையும் கூட இந்த நோய்க்கு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் அது மட்டுமே காரணம் என சொல்லிவிடவும் முடியாது என்கிறார்கள்.


நண்பர்களுடன் பகிர :