அடிக்கடி உடல்சோர்வாக உணர்கிறீர்களா? மூன்றே நாளில் புத்துணர்ச்சி தரும் சூப்பர் டிப்ஸ்...! Description: அடிக்கடி உடல்சோர்வாக உணர்கிறீர்களா? மூன்றே நாளில் புத்துணர்ச்சி தரும் சூப்பர் டிப்ஸ்...!

அடிக்கடி உடல்சோர்வாக உணர்கிறீர்களா? மூன்றே நாளில் புத்துணர்ச்சி தரும் சூப்பர் டிப்ஸ்...!


அடிக்கடி உடல்சோர்வாக உணர்கிறீர்களா? மூன்றே நாளில் புத்துணர்ச்சி தரும் சூப்பர் டிப்ஸ்...!

முன்பெல்லாம் மிகவும் சத்தான உணவுகளைத்தான் சாப்பிட்டு வந்தோம். இப்போது சத்தான, திடகாத்திரமான உணவுப்பழக்கத்தில் இருந்து நகர்ந்து வந்துவிட்டதால் உடல் ஆரோக்கியம் இழந்த தலைமுறையாக உருவாகி வருகிறோம். அதில் முக்கியமானது இந்த தலைமுறை அனுபவிக்கும் உடல்சோர்வு.

இந்த உடல்சோர்வை துரத்த அருமையான ஒரு டிப்ஸ் இருக்கிறது. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்...

முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் ஒருகைப்பிடி அளவு கருப்பு கொண்டை கடலையை எடுத்துக் கொள்ள வேண்டும். அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். இதனோடு ஐந்தில், இருந்து 6 பாதாமையும் சேர்த்து ஊறவைக்க வேண்டும். காலையில் பார்க்கும்போது பாதாமின் தோல் தானாகவே கழந்துகொண்டு வரும். அதை முற்றிலுமாக உறிந்துவிட வேண்டும்.

இந்த கருப்பு கொண்டைகடலையில் விட்டமின், கால்சியம், ப்ரோட்டீன், மினரல்ஸ், இரும்புச்சத்து, போன்ற நிறைய சத்துகள் இருக்கிறது. இது இரத்தசோகையை இல்லாமல் ஆக்கிவிடும். தினசரி ஐந்து பாதாம்களை சாப்பிட்டால் மாரடைப்பு எட்டியே பார்க்காது. பாதாமை குழந்தைகளுக்கு கொடுத்துவர நியாபக சக்தி அதிகரிக்கும்.

இந்த கலவையோடு ஒரு ஸ்பூன் அளவுக்கு நாட்டு சர்க்கரையையும் சேர்த்து சாப்பிடலாம். இனி இதை எப்படி சாப்பிடுவது என பார்க்கலாம். காலையில் சிற்றுண்டி சாப்பிடுவதற்கு முன்பு வெறும் வயிறாக இருக்கும்போது, இந்த கொண்டைகடலை, தோலுரித்த பாதம், கொஞ்சம் சர்க்கரை சேர்த்த கலவையை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். இது ருசியாகவும் இருக்கும். அதேபோல் இதோடு நாம் சேர்த்து சாப்பிடும் சர்க்கரை பாதாமையும், கொண்டைகடலையையும் நன்றாக சீரணிக்க வைத்துவிடும். சர்க்கரையில் இரும்புசத்தும் அதிகம். இதில் சர்க்கரைநோய் இருப்பவர்கள்மட்டும் சர்க்கரை சேர்த்து சாப்பிடுவதை தவிர்த்து விடலாம்.

அதிகமான அளவு உடல்சோர்வு இருப்பவர்கள் முதல்நாள் காலையில் மட்டும் சாப்பிட வேண்டும். இரண்டாம்நாள் காலையிலும், மதியமும் சாப்பிட வேண்டும். மூன்றாவதுநாளும் காலையிலும், மதியமும் இதேபோல் சாப்பிட வேண்டும். அதிலேயே மாற்றத்தை உணரலாம். இதைத் தொடர்ந்து ஒரு மாதத்துக்கு எடுத்துக் கொண்டால் நல்லதீர்வு கிடைக்கும். புத்துணர்ச்சியாகவும் உணர்வீர்கள்.

பாலூட்டும் தாய்மார்களும், கருவுற்று இருப்பவர்களும், குழந்தைகளும் இந்த கொண்டை கடலையை வேகவைத்து சாப்பிடலாம். பச்சையாக சாப்பிடக் கூடாது. முயற்சித்துப் பாருங்கள்..மூன்றே நாளில் மாற்றத்தை உணர்வீர்கள்.

வீடியோ இணைப்பு கீழே:

நண்பர்களுடன் பகிர :