புலம்பெயர் அகதிகளின் வலியை சொல்லும் ஒற்றைப்படம்! தந்தையும், மகளும் பலியாகி உலகுக்கு உணர்த்தி இருக்கும் பாடம்...! Description: புலம்பெயர் அகதிகளின் வலியை சொல்லும் ஒற்றைப்படம்! தந்தையும், மகளும் பலியாகி உலகுக்கு உணர்த்தி இருக்கும் பாடம்...!

புலம்பெயர் அகதிகளின் வலியை சொல்லும் ஒற்றைப்படம்! தந்தையும், மகளும் பலியாகி உலகுக்கு உணர்த்தி இருக்கும் பாடம்...!


புலம்பெயர் அகதிகளின் வலியை சொல்லும் ஒற்றைப்படம்! தந்தையும், மகளும் பலியாகி உலகுக்கு உணர்த்தி இருக்கும் பாடம்...!

புகைப்படத்தை பார்த்த ஒருகனத்தில் நெஞ்சம் உடைந்து போகிறது. இரண்டரை வயது மகளுடன், ஆற்றில் இறந்தநிலையில் மிதக்கிறார் தந்தை. என்ன நடந்தது என விசாரித்தால் இந்த ஒற்றைப்படத்தின் பின்னால் புலம்பெயர் அகதிகளின் துயர்மிகு வலி இருக்கிறது.

கடந்த ஏப்ரல் மாதம் தங்கள் சொந்தநாடான எல்சால்வடாரை விட்டு, மெக்சிகோவிலுக்குள்ள அகதிகள் முகாம் ஒன்றுக்கு வந்தது ஆஸ்கர் அல்பெர்டோ மார்டின்ஸ் ராமிர்ஸ் என்பவரது குடும்பம். அமெரிக்காவில் புகழிடம் கோரி விண்ணப்பித்து கடந்த இருமாதங்களாக இந்த குடும்பம் காத்து இருந்தது. ஆனால் தூதரகத்தில் விண்ணப்பிப்பதற்கான அப்பாயிண்ட்மெண்ட் கூட கிடைக்கவில்லை.

நீண்டநேர காத்திருப்பில் ஏமாந்தவர், சட்டவிரோதமாக ஆற்றில் நீந்திக்கடக்க முடிவெடுத்தார். இதற்காக ரியோ கிராண்ட் ஆற்றை நீந்திக்கடக்க முடிவு செய்தார் அவர். முதலில் தன் இரண்டரை வயது குழந்தையை ஆற்றின் மறுகரையில் கொண்டுபோய் சேர்த்துவிட்டு தொடர்ந்து தனது மனைவியை வந்து அழைத்துச் செல்லும் ஏற்பாட்டோடோடு சென்றார். ஆனால் இவரது குழந்தை துரதிஷ்டவசமாக அவர் தலையில் வைத்து தூக்கிக் கொண்டு செல்லும்போது தண்ணீருக்குள் குதித்துவிட்டது.

இதைப் பார்த்து பதறிய மார்ட்டின்ஸ்ம் அவளைக் காப்பாற்ற நீந்திச்செல்ல, அப்போது வேகமாக வந்த வெள்ளம் அவரையும் இழுத்து சென்றது. மனைவி கண்முன்னே இருவரும் தண்ணீரில் சிக்கி இறந்து போனார்கள். இதுகுறித்து அவர் போலீஸூக்கும் தகவல்சொல்ல, மார்ட்டின்ஸ், அவரது செல்ல மகள் வலேரியா ஆகியோரின் சடலங்கள் மீட்கப்பட்டு இருக்கின்றன.

அமெரிக்க தூதரகத்தில் புலம்பெயர்தல் நேர்காணலுக்காக 1700 பேர் வரை காத்திருக்கும் நிலையில், தினமும் 40 பேர் என்ற அடிப்படையிலேயே நேர்காணல் நடக்கிறது. புதுவாழ்வு துவங்க அமெரிக்க செல்ல திட்டமிட்டவர்களின் வாழ்க்கை இத்தனை துயரத்துக்கு உள்ளாகி இருக்கிறது. ஆற்றில் இறந்த நிலையில் கிடக்கும் தந்தை, மகளின் படங்கள் புலம்பெயர்ந்தோரின் துயர்மிகு வாழ்வை பேசுகிறது.

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:


நண்பர்களுடன் பகிர :