அடிபட்ட நாய் மருத்துக்கடைக்கு போய் உதவிகேட்ட ஆச்சர்யம்... இந்த நாயின் புத்திசாலித்தனத்தை பாருங்க.. சிலிர்த்து போவீங்க..! Description: அடிபட்ட நாய் மருத்துக்கடைக்கு போய் உதவிகேட்ட ஆச்சர்யம்... இந்த நாயின் புத்திசாலித்தனத்தை பாருங்க.. சிலிர்த்து போவீங்க..!

அடிபட்ட நாய் மருத்துக்கடைக்கு போய் உதவிகேட்ட ஆச்சர்யம்... இந்த நாயின் புத்திசாலித்தனத்தை பாருங்க.. சிலிர்த்து போவீங்க..!


அடிபட்ட நாய் மருத்துக்கடைக்கு போய் உதவிகேட்ட ஆச்சர்யம்... இந்த நாயின் புத்திசாலித்தனத்தை பாருங்க.. சிலிர்த்து போவீங்க..!

மிருகங்களிலேயே மிகவும் புத்திசாலி என பெயர் எடுத்தது நாய்கள் தான். அதனால் தான் காவல்துறையிலேயே குற்றங்களை கண்டுபிடிப்பதில் நாய்களை பயன்படுத்துகின்றனர். மோப்பநாய்கள் காவல்துறையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதபடுகிறது.

சில தினங்களுக்கு முன்பு தண்ணீர் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஒன்று தண்ணீரில் பந்தை எடுக்கப்போக, அதை வளர்ப்பு நாய் ஒன்று பார்த்தது. இதில் குழந்தையை கரையில் எடுத்து போட்டதோடு, பந்தையும் எடுத்து வந்தது. இந்த சம்பவம் சிலதினங்களுக்கு முன்பு வைரலானது. இப்போது இன்னொரு சம்பவம் நாயின் புத்திசாலித்தனத்தை காட்டுவது போல் அமைந்துள்ளது. இச்சம்பவமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

துருக்கியில் மருந்துகடை நடத்துபவர் செங்கிஸ். விலங்கின ஆர்வலரான இவர் தெருநாய்களின் மீது அலாதி ப்ரியம் கொண்டபர். இவர் நாய்கள் உறங்குவதற்காகவே தன் கடையின் ஒருபகுதியில் படுக்கைவசதியும் அமைத்து இருக்கிறார். இந்நிலையில் தன் கடைக்கு ஒருநாய் ஒன்றுவர, செங்கிஸ் அதற்கு சாப்பாடு வைத்தார். ஆனால் நாயோ, உணவைச் சாப்பிடவில்லை. மாறாக செங்கிஸைப் பார்த்து தன் காலை நீட்டி இருக்கிறது. அப்போது தான் அதன் காலில் அடிபட்டு ரத்தம் வந்திருந்ததை கவனித்தார் செங்கிஸ். உடனே தன்னிடம் காலில் மருந்துபோடச் சொல்லும் அதன் புத்திகூர்மையை வியந்து அதற்கு மருந்திட்டார் செங்கிஸ்.

மருந்திட்ட பின்பு அந்த நாயும் அங்கேயே படுத்துக் கொண்டது. செங்கிஸின் மனிதநேயமும், நாயின் புத்திசாலித்தனமும் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :