மலச்சிக்கல், வாயுத்தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? ஈஸியாக போக வைக்க சூப்பரான டிப்ஸ்...! Description: மலச்சிக்கல், வாயுத்தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? ஈஸியாக போக வைக்க சூப்பரான டிப்ஸ்...!

மலச்சிக்கல், வாயுத்தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? ஈஸியாக போக வைக்க சூப்பரான டிப்ஸ்...!


மலச்சிக்கல், வாயுத்தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? ஈஸியாக போக வைக்க சூப்பரான டிப்ஸ்...!

நம் வயிறு ஒழுங்காக சுத்தமாகாமலும், சரியாக மலம் கழிக்காமலும் இருந்தாலே வயிறு கனமாகி விட்டதாக பீல் செய்வோம். அதனால் அன்றைய நாளே நமக்கு மோசமானதாக ஆகிவிடும். தினசரி மலம் கழித்தாலே பெரிய ரிலாக்ஸ்டாக பீல் செய்வோம்.

தினசரி மலம் கழிக்காவிட்டால் வயிற்றுவலி, வயிறு உப்பிசம் என பல பிரச்னைகளை எதிர்கொள்வோம். தினசரி மலம் கழிக்காவிட்டால் இடுப்புசதையும் கூடும். அடிக்கடி தலைவலி, முடி உதிர்வு ஆகியவற்றுக்கும் இதுவே காரணம்.

நமது வயிறு சுத்தமானாலே 45 விதமான வியாதிகள் நம்மை தாக்காது என ஆயுர்வேதத்தில் வருகிறது. நமக்கு இருக்கும் மலச்சிக்கலை போக்கவும், வாயுத்தொல்லையை தீர்க்கவும் இரண்டு எளிமையான டிப்ஸ்களை இதில் பார்க்கலாம். ஆனால் இதில் ஏதாவது ஒன்றை நாம் செயல்படுத்தினாலே போதும்.

டிப்ஸ் 1..

இரண்டு ஸ்பூன் அளவுக்கு ஓமம், ஒரு ஸ்பூன் அளவுக்கு சோம்பு, இரண்டு ஸ்பூன் அளவுக்கு சீரகம், அரை ஸ்பூன் அளவுக்கு கருப்பு உப்பு(இது டிப்பார்ட்மெண்ட் கடைகளில் கிடைக்கும்) ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த உப்பு பவுடர் போல் இருக்கும்.

ஒரு பவுல் எடுத்து அதில் நாம் எடுத்துவைத்த தேவையான பொருள்களைப் போட வேண்டும். இவை அனைத்தையும் நன்றாக கலக்க வேண்டும். இதை ஒரு சட்டியில் போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து இதை மிக்சியில் போட்டு இந்த கலவையை அரைத்துக் கொள்ள வேண்டும். இது ரொம்ப நைசாக இல்லாமல் பர,பரவென இருந்தாலே போதும்.

இதை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் செய்துவைத்து ஒருமாதம் வரை பயன்படுத்தலாம். இப்போது இதை எப்படி பயன்படுத்துவது என பார்க்கலாம். ஒரு டம்ளர் வெது,வெதுப்பான நீருக்கு, இந்த பொடியை அரை ஸ்பூன் அளவுக்கு போட்டு நன்றாக கலக்கி குடிக்கலாம். ஆனால் இதை தினசரி ஒருமுறை மட்டும்தான் குடிக்க வேண்டும். அதை உங்களுக்கு எப்போது தோன்றுகிறதோ, அப்போது குடித்துக் கொள்ளலாம்.

டிப்ஸ் 2

ஒரு டம்ளரில் வெது,வெதுப்பான சூட்டில் பாலை எடுத்துக்கொள்ள வேண்டும். அதனோடு ஒரு ஸ்பூன் அளவுக்கு ஆமணக்கு எண்ணெய் சேர்த்து, நன்றாக கலக்கிவிட வேண்டும். இதை இரவு தூங்குவதற்கு முன்பு குடிக்கணும்.

இது இரண்டில் ஏதாவது ஒருமுறையை பாளோ செய்யுங்க...உங்களுக்கு மலச்சிக்கலே இருக்காது. அப்புறம் என்ன வாயுத்தொல்லைக்கும் குட்பை சொல்லிடலாம்!

செய்முறை வீடியோ இணைப்பு கீழே :-


நண்பர்களுடன் பகிர :