வினோத நேர்த்திக்கடனால் கோயிலுக்குள் நடந்ததை பாருங்க... யானை சிலைக்குள் சிக்கிக் கொண்டு தவித்த பெண்..! Description: வினோத நேர்த்திக்கடனால் கோயிலுக்குள் நடந்ததை பாருங்க... யானை சிலைக்குள் சிக்கிக் கொண்டு தவித்த பெண்..!

வினோத நேர்த்திக்கடனால் கோயிலுக்குள் நடந்ததை பாருங்க... யானை சிலைக்குள் சிக்கிக் கொண்டு தவித்த பெண்..!


 வினோத நேர்த்திக்கடனால் கோயிலுக்குள் நடந்ததை பாருங்க...  யானை சிலைக்குள் சிக்கிக் கொண்டு தவித்த பெண்..!

கோயிலுக்கு செல்வது என்பது மனதுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் விசயங்களில் ஒன்று. மனதை ரிலாக்ஸ்டாக வைக்கவும், தங்கள் வேண்டுதலை நிறைவேற்றித்தர பிரார்த்திக்கவும் இன்று பலரும் கோயிலுக்கு செல்கின்றனர். தங்கள் பிராத்தனைகளுக்காக அவர்கள் சில நேர்த்திக்கடனும் செய்கின்றனர்.

இங்கும் அப்படி ஒரு நேர்த்திக்கடன் செய்யப் போய் என்ன நடந்தது தெரியுமா? வட இந்தியாவில் உள்ள கோயில் ஒன்றில் நடந்த சம்பவம் இது. அந்த கோயிலில் கல்லால் ஆன சின்ன ஒரு யானை சிலை இருக்கிறது. அந்த யானையின் கால்களுக்கு இடையே நுழைந்து வெளியே வருவதை நேர்த்திக்கடனாக இந்த கோயிலுக்கு வரும் பலரும் செய்கின்றனர்.

மிகவும் சின்ன அளவிலான சிலை என்பதால் இதற்குள் போய், வருவது என்பதே சிக்கலான...சவாலான விசயம் தான். ஆனால் அதில் குண்டான ஒரு பெண் நேர்த்திக்கடன் என நுழைய யானைக்கு மத்தியில் சிக்கிக் கொண்டார்.

பின்னே அவரது உறவுகள் சேர்ந்து பின்னே தள்ளி, முன்னே இழுத்து அவரை வெளியே கொண்டு வந்தனர். நேர்த்திக்கடன் அவசியம் தான். ஆனால் இப்படியெல்லாமா நேர்ந்து கொண்டு தவிக்க வேண்டும் என கமெண்ட் செய்கின்றனர் நெட்டிசன்கள்.


நண்பர்களுடன் பகிர :