பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் சாண்டி மாஸ்டரை பிரிந்தது ஏன்? முதல் மனைவி நடிகை காஜல் ஓப்பன் டாக்! Description: பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் சாண்டி மாஸ்டரை பிரிந்தது ஏன்? முதல் மனைவி நடிகை காஜல் ஓப்பன் டாக்!

பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் சாண்டி மாஸ்டரை பிரிந்தது ஏன்? முதல் மனைவி நடிகை காஜல் ஓப்பன் டாக்!


பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் சாண்டி மாஸ்டரை பிரிந்தது ஏன்? முதல் மனைவி நடிகை காஜல் ஓப்பன் டாக்!

பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் பிரபலங்களில் ஒருவர் சாண்டி மாஸ்டர். பிரபல டான்ஸ் மாஸ்டரான இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட...மயிலாட நிகழ்ச்சியின் மூலம் இயக்குனராக மிளிர்ந்தார். இவரது முதல்மனைவி நடிகை காஜல். ஆனால் இவர்கள் இருவருக்குள்ளும் கருத்து வேற்றுமை ஏற்பட்டு சில ஆண்டுகளுக்கு ,முன்பு பிரிந்தனர்.

அதன் பின்னர் சாண்டி, சில்வியா என்னும் பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். இந்நிலையில் இப்போது சாண்டி பிக்பாஸ் வீட்டுக்குப் போயிருக்கிறார். இந்நிலையில் சாண்டி பிக்பாஸ் போட்டியில் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து அவரது முதல் மனைவி காஜல் ட்விட் செய்திருக்கிறார்.

அதற்கு ஒருவர், ‘’சாண்டி காஜலின் முதல் காதல் எனச் சொல்ல..”அதற்கு, ‘’சண்டி பர்ஸ்ட் லவ் இல்ல. கடைசி லவ் பர்ஸ்ட் நான் அட்டக்கத்தி தினேஷ் மாதிரின்னு பதில் சொல்லியிருக்கிறார் காஜல்.

அதே ட்விட்டில் தங்கள் மணவாழ்க்கை ஏன் முடிந்தது என்றும் கூறியிருக்கிறார் காஜல். அதில், ‘’பிரேக்கப் ஆனது பெரிய கதை. வல்லவன் படத்தில் வரும் ரீமாசென் மாதிரி டார்ச்சர் செய்தால் யார் தாங்குவா”என பதில் சொல்லியிருக்கிறார். காஜலின் இந்த வெளிப்படையான குணமும், தன் தவறை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் நெட்டிசன்களால் லைக்களை குவித்து வருகிறது.


நண்பர்களுடன் பகிர :