பள்ளியில் அமர்ந்த நிலையில் மாணவி மரணம்.. திடுக்கிட வைக்கும் துயர் மரணம்... அதன் பின்னும் நடந்த ஆச்சர்யம்! Description: பள்ளியில் அமர்ந்த நிலையில் மாணவி மரணம்.. திடுக்கிட வைக்கும் துயர் மரணம்... அதன் பின்னும் நடந்த ஆச்சர்யம்!

பள்ளியில் அமர்ந்த நிலையில் மாணவி மரணம்.. திடுக்கிட வைக்கும் துயர் மரணம்... அதன் பின்னும் நடந்த ஆச்சர்யம்!


பள்ளியில் அமர்ந்த நிலையில் மாணவி மரணம்.. திடுக்கிட வைக்கும் துயர் மரணம்... அதன் பின்னும் நடந்த ஆச்சர்யம்!

இன்றைய காலத்தில் குழந்தைகள் பள்ளிக்கூடத்துக்கு போய் வருவதே போராட்டம் ஆகிவிட்டது. அந்த வகையில் குமரி மாவட்டத்தில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்றுக்கு படிக்கப் போன மாணவி, சடலமாக திரும்பி வந்த சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

குமரி மாவட்டத்தின் சூரியகோடு பகுதியை சேர்ந்த ரெமி பிராங்க்ளின் மார்த்தாண்டம் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு படித்து வந்தார். மிகவும் ஸ்ரிட்டான ஆசிரியர்கள் கொண்ட பள்ளி என்பதால் ஏரியாவில் அந்த பள்ளிக்கூடம் பேமஸ். சம்பவத்தன்று கிளாஸில் கணித ஆசிரியர் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது பிளாக் போடில் ஒரு கணக்குப் போட்ட டீச்சர், அந்த கணக்கை விடை எழுதி முடிக்கும்மாறு ரெமியை அழைத்திருக்கிறார். ஆனால் அவருக்கு விடை தெரியவில்லை. இதனைத் தொடர்ந்து டீச்சர் ரெமியை மற்ற மாணவர்கள் முன்பு திட்டி இருக்கிறார்.

இந்த அழுத்தம் ரெமியை மனதளவில் வெகுவாக காயப்படுத்தினாலும் அவர் அதை அழுகையாக வெளிக்காட்டவில்லை. கொஞ்சம் நேரம் அங்கேயே ரெமியை நிப்பாட்டிய டீச்சர் தொடர்ந்து அவரை பெஞ்சில் போய் உட்காரச் சொல்லிவிட்டார். ரெமியும் போய் உட்கார, பாடம் நடத்தத் துவங்கினார் ஆசிரியை. அனைவரும் அதைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

அந்த கிளாஸ் முடிந்து டீச்சர் கிளம்பும் போதும், கரும்பலகையை வைத்த கண் வாங்காமல் வெறித்தே பார்த்துக் கொண்டிருந்தார் ரெமி. டீச்சர் எழுப்ப முயற்சித்தும் ரெமியிடம் எந்த அதிர்வும் இல்லை. டீச்சர் இதுகுறித்து பள்ளி நிர்வாகத்துக்கு தெரிவிக்க, ‘’உங்க பொண்ணுக்கு தலைவலி. நீங்க வந்து கூட்டிட்டு போங்க” என போன் செய்திருக்கிறது பள்ளி நிர்வாகம். ஸ்கூலுக்கு வந்த ரெமியின் பெற்றோர் பிள்ளை மயங்கிய நிலையில் கிடப்பதைப் பார்த்து மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் தூக்கிப் போனார்கள்.

ஆஸ்பத்திரியில் ரெமியை சோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து நீண்டநேரம் ஆவதாகச் சொல்ல, பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பள்ளி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது போலீஸ். இறந்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக உயிரோடிருப்பதுபோலவே அசைவின்றி ரெமி இருந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

படிப்பு வாழ்க்கையின் ஒரு அங்கமே...அதைக் கடந்தும் வாழ்க்கை இருக்கிறது என பெற்றோருக்கும், ஆசிரியருக்கும் உணர்த்தி இருக்கிறது ரெமியின் மரணம்!


நண்பர்களுடன் பகிர :