யப்பா.... என்னா பேச்சுடா சாமி? இந்த பொடியனின் அஞ்சுநிமிச பேச்சை கேளுங்க... அசந்துடுவீங்க...! Description: யப்பா.... என்னா பேச்சுடா சாமி? இந்த பொடியனின் அஞ்சுநிமிச பேச்சை கேளுங்க... அசந்துடுவீங்க...!

யப்பா.... என்னா பேச்சுடா சாமி? இந்த பொடியனின் அஞ்சுநிமிச பேச்சை கேளுங்க... அசந்துடுவீங்க...!


யப்பா.... என்னா பேச்சுடா சாமி? இந்த பொடியனின் அஞ்சுநிமிச பேச்சை கேளுங்க... அசந்துடுவீங்க...!

பள்ளி ஒன்றில் பேச்சுப்போட்டி நடந்து வருகிறது. அதில் பேச வருகிறான் ஒரு சிறுவன். பேச்சுப்போட்டிக்கான தலைப்பு நெகிழியை ஒழிப்போம். அதாவது பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்பதாகும். அதற்கு அந்த பையன் பேச, பேச அப்படியே கவனிக்கத் தூண்டுகிறது.

அந்த பொடியனின் பேச்சில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில வரிகள் மட்டும் இங்கே... உயிர்வாழ காற்று...ஒப்பில்லா குடிநீர் அனைத்தையும் தந்து என்னை வாழவைக்கும் இயற்கை அன்னையே உன்னை வணங்கி தொடங்குகிறேன் என் உரையை...

மனிதன் மட்டுமே வளர்ச்சி...வளர்ச்சி என்னும் பெயரிலே ஒட்டுமொத்த இயற்கை வளங்களையும் கெடுத்து நாசம் பண்ணிட்டான். இப்போ சுத்தமான குடிநீருக்கும், ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் எங்கய்யா போறது? வெட்கித்தலைகுனிய வேண்டிய விசயம்.

குமரன் மலை பார்த்த நீங்கள் மட்காத குப்பைகளைக் கொண்ட மாமலையை பார்த்திருக்கிறீர்களா? நம்ம ஊரிலேயே இருக்கு. நாம சாதாரணமா தூக்கிப் போடுற பிளாஸ்டிக் கவரும், கேரிபேக்கும் நம்ம பூமித்தாயை மூச்சிரைக்க செய்கிறதே?

தாய்ப்பாலைக் கூட தயாரிக்க நினைக்கிறோம். விஞ்ஞானம் என்ற பெயரில் விஷத்தையல்லவா உற்பத்தி செய்கிறோம்.

நாங்க சின்னப்பசங்க, விவரம் தெரியாம பாட்டிலில் இருக்கும் குளிர்பானங்களையோ, பேக்கரியில் இருக்கும் பேக்கிங் ஐயிட்டங்களையோ சாப்பிடக் கேட்போம். அடம் பிடிச்சு கேட்போம். சாப்பிடாமக்கூட இருப்போம். அப்பையும் நீங்க வாங்கித்தராதீங்க பெத்தவங்களே...ஏன்னா இதெல்லாம் கேடு...

என அந்த சிறுவன் ஐந்தே நிமிடங்களில் கருத்துக்களை அள்ளுத் தெளிக்கிறான். என்னதான் வார்த்தைகளாக படித்தாலும், அட்டகாசமான உடல் மொழியாலும், அசாத்தியமான குரல் வளத்தோடும் அந்த சிறுவன் பேசுவதைக் கேளுங்கள். ஒரு நிமிடம் நீங்களும் மெய்சிலிர்த்து போவீர்கள்..

வீடீயோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டு உள்ளது..


நண்பர்களுடன் பகிர :