அம்மாவின் நகையை அடகு வைத்து நாடுவிட்டு நாடு வந்த இளைஞர்... பிக்பாஸ் வீட்டில் ஜொலிப்பாரா? காத்திருக்கும் இலங்கை மக்கள்..! Description: அம்மாவின் நகையை அடகு வைத்து நாடுவிட்டு நாடு வந்த இளைஞர்... பிக்பாஸ் வீட்டில் ஜொலிப்பாரா? காத்திருக்கும் இலங்கை மக்கள்..!

அம்மாவின் நகையை அடகு வைத்து நாடுவிட்டு நாடு வந்த இளைஞர்... பிக்பாஸ் வீட்டில் ஜொலிப்பாரா? காத்திருக்கும் இலங்கை மக்கள்..!


அம்மாவின் நகையை அடகு வைத்து நாடுவிட்டு நாடு வந்த இளைஞர்... பிக்பாஸ் வீட்டில் ஜொலிப்பாரா? காத்திருக்கும் இலங்கை மக்கள்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் இரண்டு சீசன்களிலும் ஒட்டுமொத்த தமிழகத்தையும் பார்க்க வைத்த பெருமை கமலஹாசனுக்கே உரியது. அவர், அரசியல், நைய்யாண்டி, செண்டிமெண்ட் என கலந்துகட்டிப் பேசி நிகழ்ச்சியை ஹிட் அடிக்க வைத்தார். இப்போது இலங்கை ரசிகர்களையும் பிக்பாஸை பார்க்க வைக்கும் முயற்சியை கையில் எடுத்துள்ளனர்.

அதன் ஒரு அங்கமாக இந்த முறை மொத்தமுள்ள 17 போட்டியாளர்களில் இருவர் இலங்கையை சேர்ந்தவர்கள். அதில் ஒருவர் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா, மற்றொருவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தர்ஷன்.

இவர் படிப்பு முடித்துவிட்டு ஐ.டி கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தார். ஆனாலும் தர்சனுக்கு சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பதே பெருங்கனவு. இதற்காக அவர் தனது தாயின் நகைகளை அடகுவைத்து இந்தியா வந்திருக்கிறார். ஆனாலும் இதுவரை அவரது திறமைக்கேற்ற வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

திரைத்துறையில் ஜெயிக்க பலகட்ட போராட்டங்களின் ஒரு அங்கமாக தர்ஷன் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார். இந்த நிகழ்ச்சி முடிந்து போனதும், ஒரு வருடத்தில் இரண்டு படமாவது நடிப்பதே தனது லட்சியம் என்று அறிமுகப்படுத்தும்போது கமலிடம் உருகினார் தர்ஷன் .

இந்த இலங்கை இளைஞரின் கனவு நினைவாகுமா என்பது போக,போகத்தான் தெரியும். அதை ஆர்வத்தோடு பார்க்க தயாராகி வருகின்றனர் இலங்கை மக்கள்.


நண்பர்களுடன் பகிர :