வடிவேலுவின் வாசல் தேடி வந்த ஹாலிவுட் படவாய்ப்பு... எல்லை தாண்டும் நேசமணியின் புகழ்..! Description: வடிவேலுவின் வாசல் தேடி வந்த ஹாலிவுட் படவாய்ப்பு... எல்லை தாண்டும் நேசமணியின் புகழ்..!

வடிவேலுவின் வாசல் தேடி வந்த ஹாலிவுட் படவாய்ப்பு... எல்லை தாண்டும் நேசமணியின் புகழ்..!


வடிவேலுவின் வாசல் தேடி வந்த ஹாலிவுட் படவாய்ப்பு... எல்லை தாண்டும் நேசமணியின் புகழ்..!

வடிவேலு மகா கலைஞர். இம்சை அரசன் பார்ட் டூவில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருந்த நிலையில் சிக பிரச்னைகள் அவரை சூழ்ந்தது. சங்கர், சிம்புதேவன் என இயக்குனர்களுக்கு எதிராகவும் பேச தமிழ்ப்பட வாய்ப்புகளும் வடிவேலுவுக்கு குறைந்து போனது. ஆனாலும் அதையெல்லாம் அலட்டிக்கொள்ளாத வடிவேலு தன் குடும்பத்தினருடன் நேரத்தை செலவு செய்து வந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் பிரண்ட்ஸ் படத்தில் நடித்த நேசமணி கதாபாத்திரம் உலக அளவில் டிரெண்டானது.இந்நிலையில் அண்மையில் ஒரு மீடீயாவுக்கு பேட்டி கொடுத்த வடிவேலு, நான் நினைத்தால் ஹாலிவுட்டிலேயே நடிப்பேன் என சொன்னார். அப்படி ஒரு வாய்ப்பு மெய்யாலுமே இப்போது வடிவேலுவை தேடி வந்திருக்கிறது.

முன்பெல்லாம் படங்கள் திரையரங்கில் மட்டுமே வரும். அதைக் காண திருவிழா கூட்டம் போல் மக்கள் வருவார்கள். பதாகை, பிளக்ஸ் என அமளிதுமளிப்படும். இப்போது அமேசான் ப்ரைம், நெட்பிளிக்ஸ் போன்ற ஆன்லைன் ஹாலிவுட் வீடீயோ ஒளிபரப்பு தளங்கள் விரு,விருவென வளர்ந்து வருகின்றன. இளசுகள் அதை நோக்கி நகரத் துவங்கியுள்ளனர். இந்நிலையில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் வடிவேலுவை அணுகி முழு நீள காமெடி வெப் சீரிஸில் நடிக்கக் கேட்டிருக்கிறது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தகவல்கள் கசிகிறது. பெரிய திரையோ...சின்னத்திரையோ சீக்கிரமா திரும்பி வாங்க வடிவேலு சார்...நேசமணிக்காக ஏழரை கோடி ரசிகர்கள் காத்திருக்கிறோம்.


நண்பர்களுடன் பகிர :

S
Sathiyamurthy 11மாதத்திற்கு முன்
நல்ல கலைஞன் ... வீணாக கூடாது ... மீண்டு வாருங்கள் ... மீண்டும் வாருங்கள் ....