கதறி அழுத தாய்... உயிருக்குப் போராடிய குழந்தை... இதைப் பார்த்த நிருபர் என்ன செய்தார் தெரியுமா? Description: கதறி அழுத தாய்... உயிருக்குப் போராடிய குழந்தை... இதைப் பார்த்த நிருபர் என்ன செய்தார் தெரியுமா?

கதறி அழுத தாய்... உயிருக்குப் போராடிய குழந்தை... இதைப் பார்த்த நிருபர் என்ன செய்தார் தெரியுமா?


கதறி அழுத தாய்... உயிருக்குப் போராடிய குழந்தை... இதைப் பார்த்த நிருபர் என்ன செய்தார் தெரியுமா?

ஒரு குழந்தை உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. அதை தன் மடியிலே எந்திக் கொண்டு அதன் தாய் அழுத் கொண்டிருக்கிறார். இதை ஒரு நிருபர் பார்க்கிறார். பிரேக்கிங் செய்திக்கு ஆசைப்பட்டு தன் கேமராவை எடுத்து உடனே சூட் செய்யத் துவங்கி இருப்பார் என்று நினைக்கிறீர்களா? அதுதான் இல்லை. அங்கே தான் அந்த நிருபரின் மனிதம் பலரது பாராட்டுக்களையும் குவித்துள்ளது.

பீகார் மாநிலம், முசாபர்பூர் மாவட்டத்தில் குழந்தைகளை மூளைக்காய்ச்சல் நோய் மிகத்தீவிரமாக தாக்கி வருகிறது. இதனால் இதுவரை 120 குழந்தைகள் உயிர் இழந்துள்ளனர். இந்நிலையில் மிசாப்பூரை ஒட்டிய கிராமம் ஒன்றில் சாலையோரத்தில் தாய் ஒருவர், மூளைக்காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளான தன் குழந்தையோடு உட்கார்ந்திருந்தார். அந்த குழந்தை சில தினங்களுக்கு முன்புதான் மூளைக்காய்ச்சலுக்கு சிகிட்சை பெற்று வீட்டுக்கு வந்த நிலையில் மீண்டும் இப்படி சம்பவம் நடந்துள்ளது.

காய்ச்சலால் தவித்தது குழந்தை. ஆட்டோ பிடித்து அழைத்து வரவும் கூட கையில் காசு இல்லை. நீண்ட தூரம் மருத்துவமனையை நோக்கி நடந்தே வந்திருக்கிறார் அந்த குழந்தையை தூக்கிக் கொண்டு! உடல் வலுவிலந்து, தனது மகனையும் தரையில் வைத்துக்கொண்டு அழுது கொண்டு இருந்தார் அந்த தாய். இதை அந்த வழியாக நடந்து சென்ற பலரும் பார்த்தும், ஒருவரும் இதுகுறித்து அந்த பெண்ணிடம் விசாரிக்கவோ, ஆறுதல் சொல்லவோ இல்லை.

இந்நிலையில் அந்த வழியில் அமீர் என்ற நிருபர் ஒருவர் வந்தார். அவர் தனது இருசக்கரவாகனத்தில் அம்மாவையும் குழந்தையையும் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றார். மருத்துவமனையில் சோதித்த மருத்துவர்கள் இன்னும் கொஞ்சம் தாமதித்திருந்தாலும் உயிருக்கே ஆபத்தாக முடிந்திருக்கும் என சொன்னதோடு, அந்த நிருபரையும்,. அவரது சமூக பொறுப்புணர்வையும் வெகுவாகப் பாராட்டினர்.

அவர் பிரேக்கிங் நியூஸ்க்கு ஆசைப்படாமல், பெயர் எடுக்க வேண்டும் என நினைக்காமல் மனிதநேயத்தோடு செய்த அந்த செயல் அவரை பீகாரின் ஹீரோவாக்கியுள்ளது. அவர் சிகிட்சைக்கு அழைத்து செல்லும் படத்தை எடுத்த அந்த பகுதிவாசிகளால் அது இப்போது வரைலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :