இப்படியொரு தீவு இருக்குறது தெரியுமா? இங்கே மூணு மாசம் பகல்...மூணு மாசம் இரவு! Description: இப்படியொரு தீவு இருக்குறது தெரியுமா? இங்கே மூணு மாசம் பகல்...மூணு மாசம் இரவு!

இப்படியொரு தீவு இருக்குறது தெரியுமா? இங்கே மூணு மாசம் பகல்...மூணு மாசம் இரவு!


இப்படியொரு தீவு இருக்குறது தெரியுமா? இங்கே மூணு மாசம் பகல்...மூணு மாசம் இரவு!

ஒரு நாளுக்கு 24 மணி நேரம். இதில் பகல் உண்டு. அதற்கு சரிக்கு சமமான அளவுக்கு இரவும் உண்டு அப்படித்தானே? ஆனால் மூன்று மாதங்கள் பகல் மட்டுமாகவும், அடுத்த மூன்று மாதங்கள் இரவு மட்டுமாகவும் உள்ள ஒரு அதிசய தீவு இருக்கிறது. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

இப்போது இங்கு சூரியன் மறையவே இல்லை. இந்த தீவு நார்வே நாட்டில் உள்ளது. சூரியன் மறையாத இந்த தீவை இந்த பகுதி மக்கள் ‘’கோடைத்தீவு” என்கின்றனர். இப்போது இங்கு நிலவும் இந்த பகல் ஜூலை 26ம் தேதி வரை தொடருமாம்.

இதை அறிவியல் வல்லுனர்களே சொல்கிறார்கள். இதேபோல் இந்த தீவில் நவம்பர் மாதம் முதல் ஜனவரி வரை சூரியனே உதிக்காது என்பது இன்னும் ஆச்சர்யம் அளிக்கிறது.

இந்த நேரத்தை நார்வே மக்கள் ‘’நீண்ட போலார் இரவுகள்’’ என அழைக்கின்றனர். கால நேரம் அற்ற தீவு என அறிவியலாளர்களால் அழைக்கப்படும் இந்த தீவில் சுமார் 300 பேர் வாழ்கின்றனர். இந்த தீவை இதே பெயர் கொண்டு அழைக்க வேண்டும் என நார்வே அரசுக்கு இந்த மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இப்படி அறிவித்தால் அலுவலகம், பள்ளி, கல்லூரிகளுக்கு அலுவலக நேர விதிமுறைகளில் தளர்வு கிடைக்குமாம்.

இருந்தாலும் இது அசர வைக்கும் கொள்ளை அழகு கொண்ட தீவு தாங்க!


நண்பர்களுடன் பகிர :