குழந்தைபேறு இன்றி தவித்த தாய்... இரட்டை குழந்தைகளை தத்தெடுத்ததும் நடந்த அதிசயம் தெரியுமா? Description: குழந்தைபேறு இன்றி தவித்த தாய்... இரட்டை குழந்தைகளை தத்தெடுத்ததும் நடந்த அதிசயம் தெரியுமா?

குழந்தைபேறு இன்றி தவித்த தாய்... இரட்டை குழந்தைகளை தத்தெடுத்ததும் நடந்த அதிசயம் தெரியுமா?


குழந்தைபேறு இன்றி தவித்த தாய்... இரட்டை குழந்தைகளை தத்தெடுத்ததும் நடந்த அதிசயம் தெரியுமா?

குழல் இனிது...யாழ் இனிது என்பர். தன் மக்கள் மழலை சொல் கேளாதவர் என வரும் தமிழ் பாடலைப் போல குழந்தை செல்வத்தின் அருமை, பெருமைகள் அது இல்லாமல் தவிப்பவர்களுக்குத் தான் தெரியும். அப்படித்தவித்த ஒரு தாயின் வாழ்வில் நடந்த சம்பவம் தான் இது. பிரித்தானியாவை சேர்ந்த அலி சாண்டர்ஸ் என்னும் தாயின் வாழ்வில் நடந்த இந்த சம்பவத்தை புத்தகமாக எழுதி இருக்கிறார்.

இவர் கடந்த 2012ம் ஆண்டு தன்னுடன் கல்லூரியில் பயின்ற மைக்கேல் என்பவரை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். நீண்டகாலமாக கர்ப்பம் தரிக்காமலேயே இருந்தார் அலி சாண்டர்ஸ். மருத்துவமனைக்குப் போய் பரிசோதனை செய்து கொண்ட தம்பதிகளுக்கு, தங்கள் இருவருக்குமே குழந்தை பெற்றுக் கொள்வதில் சிக்கல் இருப்பதாகவும், அதனால் கருத்தரிக்காது எனவும் கூற ஷாக் ஆனார்கள். அதேநேரம் செயற்கை கருத்தரித்தலின் மூலம் குழந்தை பெற முடியும் என சொல்லி இருக்கின்றனர்.

ஆனாலும் பலநேரங்களில் செயற்கை கருத்தரித்தல் தோல்வியில் தான் முடியுமென அவரது தோழி ஒருவர் கூற, மனவேதபை அடைந்த அலி சாண்டர்ஸ் சமூகநலமையத்தில் தத்தெடுக்க விண்ணப்பித்தனர். சிலதினங்களில் அங்கிருந்து அவர்களுக்கு அழைப்பு வந்தது. இரட்டைக் குழந்தைகள் இருக்கின்றன. நீங்கள் விரும்பினால் தத்தெடுக்கலாம் எனக் கூறியதைத் தொடர்ந்து கணவனும், மனைவியும் அங்கு போனார்கள். அவை அழகாகவும், புஷ்டியாகவும் இருந்தன. அவற்றை அலி சாண்டர்ஸ் விரும்பியதால் தத்தெடுப்பும் செய்தனர்.

2014ம் ஆண்டு நீதிமன்ற உத்தரவு பெற்று சட்டப்படி இதை செய்தனர். குழந்தைகள் வீட்டுக்கு வந்த நேரமோ என்னவோ, மறுநாளே கர்ப்பமே ஆக முடியாது எனக் கூறப்பட்ட அலிசாண்டர்ஸ் கர்ப்பம் ஆனார். உடனே அந்த குழந்தைகளை திருப்பிக் கொடுத்துவிடலாம் என என் கணவர் சொன்னார். அந்த குழந்தைகளை என் கையில் இருந்து பறித்தபோது அழுதேன். அவர்களை நினைத்து சில நேரம் தற்கொலை செய்யக் கூட யோசித்தேன்.

எனக்கு இப்போது குழந்தை பிறந்து 3 வயது ஆகிறது. இப்போதும் சாலையில் எங்கேனும் இரட்டைக் குழந்தைகள் பார்த்தால் அது அவர்களாக இருக்குமோ என என் கண்கள் அலைபாய்கிறது. ஒருநாள் நிச்சயம் அவர்கள் என் வீட்டு வாசலை வந்து தட்டுவார்கள் என நம்பிக்கை இருக்கிறது என சொல்லும் இந்த பாசத்தாய் இதுகுறித்து ஒரு புத்தகமும் எழுதி இருக்கிறார்.


நண்பர்களுடன் பகிர :