ஒரே பிரசவத்தில் 17 குழந்தைகள் பிறந்ததா? உலக அளவில் வைரலான புகைப்படத்தின் உண்மைநிலை இதுதான்...! Description: ஒரே பிரசவத்தில் 17 குழந்தைகள் பிறந்ததா? உலக அளவில் வைரலான புகைப்படத்தின் உண்மைநிலை இதுதான்...!

ஒரே பிரசவத்தில் 17 குழந்தைகள் பிறந்ததா? உலக அளவில் வைரலான புகைப்படத்தின் உண்மைநிலை இதுதான்...!


ஒரே பிரசவத்தில் 17 குழந்தைகள் பிறந்ததா? உலக அளவில் வைரலான புகைப்படத்தின் உண்மைநிலை இதுதான்...!

இணையத்தில் எப்போது எது வைரலாகும் என யாருக்குமே தெரியாது. ஆனால் அதன் உண்மைத்தன்மைகள் தான் பகிர்பவர்களால் உறுதியாகக் கூற முடியாது. ஒரு விசயம் அதிகமாக பகிரப்படுவதில் சில நன்மைகளும், சில தீமைகளும் இருக்கின்றன. சிலநேரங்களில் பொய் செய்திகளும் கூட வேகமாக பரவி விடுகின்றன.

அப்படி கடந்த சில தினங்களில் மிக வேகமாக பரவிய பொய் செய்திதான் ஒரே பிரவத்தில் 17 குழந்தைகள் பிறந்ததாக வந்த பதிவு என்பது இப்போது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்...

கடந்த மே 30ம் தேதியன்று, richard camarinta dy என்பவர் ,முகநூலில் ஒரு பதிவிட்டார். அதில், ‘’அமெரிக்காவை சேர்ந்த கேத்தரின் பிரிட்ஜ் என்ற பெண் ஒரே பிரசவத்தில் 17 ஆண் குழந்தைகளைப் பெற்று உலக சாதனை நிகழ்த்தியிருக்கிறார். என்ற குறிப்போடு கேத்தரின் பிரிட்ஜ் தன் பெரிய வயிற்றுடன் இருக்கும் ஒருபடம், அவருக்கு பிறந்ததாகச் சொல்லி 17 ஆண்குழந்தைகள் ஒரே அறையில் இருக்கும் படம், குழந்தைகள் அவர்களின் தந்தை ராபர்ட் பீட்டருடன் இருக்கும் படம் ஆகிய படங்களையும் சேர்த்து போட்டிருந்தார்.

இந்த பதிவு உலகம் முழுவதும் செம வைரலானது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட அந்த பெண் பெரிய வயிற்றுடன் இருக்கும்படம் போட்டோஷாப் என்பது இப்போது தெரிய வந்துள்ளது. இது பொய் செய்தி எனவும் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவில் ஒரு பெண் ஒரே பிரசவத்தில் 8 குழந்தைகள் பிரசுவித்ததே ஒரே நேரத்தில் நடந்த கூடுதல் பிரசவங்கள் எனவும் தெரிய வந்துள்ளது.


நண்பர்களுடன் பகிர :