டிக்டாக் சாகசத்தின் போது விபரீதம்... வாழ்க்கை முழுவதும் வலியை சுமக்கும் 19வயது வாலிபன்..! Description: டிக்டாக் சாகசத்தின் போது விபரீதம்... வாழ்க்கை முழுவதும் வலியை சுமக்கும் 19வயது வாலிபன்..!

டிக்டாக் சாகசத்தின் போது விபரீதம்... வாழ்க்கை முழுவதும் வலியை சுமக்கும் 19வயது வாலிபன்..!


டிக்டாக் சாகசத்தின் போது விபரீதம்... வாழ்க்கை முழுவதும் வலியை சுமக்கும் 19வயது வாலிபன்..!

இது டிக்டாக் உலகமாக மாறி இருக்கிறது. எங்கும் டிக்டாக், எதிலும் டிக்டாக் என்பது போல் எல்லா இடங்களிலும் டிக்டாக் மோகத்தில் இயங்கும் தலைமுறை இன்று உருவாகிவிட்டது. இந்த டிக்டாக் வீடீயோவுக்கு முயற்சித்த இளைஞன் ஒருவர் வாழ்நாள் முழுவதும் வலியை சுமக்கும் பரிதாப நிலைக்கு தள்ளி விடப்பட்டுள்ளார்.

கர்நாடகாவின் துமகூரு பகுதியை சேர்ந்தவர் குமார். 19 வயதே ஆன இவர் டிக்டாக்கில் வீடோயோ ஒன்றை பதிவிடுவதற்கு தனது நண்பர் ஒருவரின் உதவியை நாடியுள்ளார். பேக்பிலிப் எனப்படும் பின்புறமாக குதித்தலை வீடீயோவாக எடுத்து அதை டிக்டாக்கில் பதிவு செய்ய திட்டம் வகுத்தார்.

அதை செய்த குமார், அதற்கான முயற்சியில் பின்புறமாக குதிக்கும் போது, தன் கால்களை தரையில் ஊன்ற முடியாமல் அவர் தடுமாறி இருக்கிறார். அப்போது அவரது தலையானது நேராகத் தரையில் போய் மோதியது. இதில் அவரது கழுத்தும், முதுகெழும்பும் உடைந்தது. உடனே டிக்டாக்கிற்காக வீடீயோ பதிவு செய்து கொண்டிருந்த அவரது நண்பர் செல்போனை கீழே வைத்துவிட்டு அவரை கூட்டிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார்.

ஒவ்வொரு மனிதனுக்கும் முதுகெழும்பு தான் அவன் வாழ்க்கைக்கான ஜீவன். ஆனிவேரான அந்த முதுகெழும்பே உடைந்துள்ளதால் இவரது வாழ்க்கையே ரிஸ்க் ஆகியுள்ளது. டிக்டாக் என்பது சில நிமிட சந்தோஷம். அதற்காக இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுக்கலாமா?


நண்பர்களுடன் பகிர :